கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலைசெய்யப்பட்ட வழக்கில் அரசின் நடவடிக்கையில் திருப்தி இல்லை என பெண் பயிற்சி மருத்துவரின் தாய் வேதனை தெரிவித்துள்ளார்.
கொல்கத்தாவில் கடந்த ஆகஸ்ட் 9ம் தேதி கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொல்லப்பட்டார். நாடியே உலுக்கிய இந்த கொடூர கொலை வழக்கில் தற்போது வரை ஒருவர் மட்டுமே கைதாகி உள்ள நிலையில் இந்த வழக்கை தற்போது சிபிஐ விசாரித்து வருகிறது.
கனவோடு மருத்துவர் பயிற்சி எடுத்து வந்த இளம் பெண் கொல்லப்பட்டதற்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என பலரும் போராட்டம் நடத்தி வரும் நிலையில் தற்போது இந்த கொலை வழக்கை உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க உள்ளது .
தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா அமர்வில் ஆகஸ்ட் 20ம் தேதி விசாரணைக்கு வருகிறது.
இந்நிலையில் இந்த கொலை வழக்கில் அரசின் நடவடிக்கையில் திருப்தி இல்லை என பெண் பயிற்சி மருத்துவரின் தாய் வேதனை தெரிவித்துள்ளார்.
Also Read : கோரத்தாண்டவம் ஆடும் காட்டாற்று வெள்ளம் – தற்காலிக பாலம் அமைக்க மலைக்கிராம மக்கள்..!!
உங்கள் மகளுக்கு உடல் நலம் சரியில்லை என்றுதான் எங்களுக்கு முதலில் போன் வந்தது. அதன்பின் தொடர்புகொண்டபோது அவள் தற்கொலை செய்துகொண்டதாக கூறினார்கள்.
நாங்கள் மருத்துவமனை சென்றபோது முதலில் மகளின் உடலை பார்க்க அனுமதிக்கவில்லை. அவளது கை உடைந்திருந்தது. கண்களில் இருந்து ரத்தம் வழிந்தது. இது தற்கொலையாக இருக்காது. ‘கொலை’ எனக் கூறினேன்.
என் மகளை எப்படியாவது மருத்துவராக்கிவிட வேண்டும் என ஆசைப்பட்டேன்.ஆனால் கொன்றுவிட்டார்கள்.
குற்றவாளிகளை விரைவில் கைது செய்வதாக முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறினார். ஆனால் இதுவரை ஒருவர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளார். அரசின் நடவடிக்கை திருப்தி அளிக்கவில்லை என பெண் பயிற்சி மருத்துவரின் தாய் வேதனை தெரிவித்துள்ளார்.