சென்னை பனையூரில் நாளை தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் என்ற புதிய அரசியல் கட்சியினை தொடங்கியுள்ள நடிகர் விஜய் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்காக ஆயத்தமாகி வருகிறார்.
Also Read : ரஜினியின் பயோபிக் எடுக்க ஆசை – இயக்குனர் சங்கர் ஓபன் டாக்..!!
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் மாபெரும் மாநாடு ஒன்றை நடத்திய விஜய் தமிழகத்தில் தற்போது நடைபெறும் பல குற்றச்சம்பவங்களுக்கு தனது எதிர்ப்புகளையும் கண்டனத்தையும் தெரிவித்து வருகிறார்.
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது . த.வெ.க மாவட்ட செயலாளர்கள், அணி தலைவர்கள் நாளை இறுதிச் செய்யப்பட உள்ளதாகவும் . வாக்கெடுப்பு முறையில் த.வெ.க மாவட்ட செயலாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது .