தமிழகத்தில் இன்றும் கனமழை : வானிலை மையம் தகவல்!

districts-in-Tamil-Nadu-may-receive-heavy-rains
districts in Tamil Nadu-may receive heavy rains

வடகிழக்கு பருவமழை காரணமாக இன்று அரியலூர், பெரம்பலூர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பெய்த தொடர் கனமழை காரணமாக பல பகுதிகளும் வெள்ளக்காடாக காட்சியளித்தது.
தற்போது தமிழகத்தின் பல நகரங்கள் வெள்ளத்தில் இருந்து மீண்டு இயல்பு நிலை திரும்பி வருகிறது.

இந்நிலையில் வடகிழக்கு பருவகாற்றின் காரணமாக தமிழகத்தில் கடந்த 2 தினங்களாக சில இடங்களில் மழை பெய்து வருகிறது. இதை தொடர்ந்து தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் இன்றும கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இன்று அரியலூர், பெரம்பலூர், மதுரை, விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அனேக இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

districts-in-Tamil-Nadu-may-receive-heavy-rains
districts in Tamil Nadu-may receive heavy rains

மேலும் சென்னையை பொறுத்தவரையில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது..

Total
0
Shares
Related Posts