ஐஸ்வர்யா ராய் – அபிஷேக் பச்சன் ஜோடி விவாகரத்து செய்து பிரிய உள்ளதாக தகவல் பரவிய நிலையில் அதுகுறித்து நடிகர் அபிஷேக் பச்சன் விளக்கம் அளித்துள்ளார்.
பாலிவுட்டில் நட்சத்திர ஜோடியாக வலம் வரும் ஐஸ்வர்யா ராய் – அபிஷேக் பச்சன் ஜோடிக்கு கடந்த 2007-ம் ஆண்டு திருமணம் ஆனது. இந்த ஜோடிக்கு ஆராத்யா என்கிற மகளும் இருக்கிறார்.
இந்நிலையில் 17 ஆண்டுகள் ஒன்றாக மகிச்சியுடன் வாழ்ந்து வந்த இந்த ஜோடிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவர்கள் விவாகரத்து செய்து பிரிய உள்ளதாக கடந்த சில மாதங்களாகவே செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தன.
இதையும் படிங்க : ராஜஸ்தானில் கன மழை : 20 பேர் உயிரிழப்பு!!
இந்த வதந்திகளுக்கிடையியே அண்மையில் நடந்து முடிந்த அம்பானி மகன் திருமணத்தில் ஐஸ்வர்யா ராய் தன் மகளுடன் தனியாகவும், அபிஷேக் பச்சன் தன் பெற்றோருடன் தனியாகவும் வந்திருந்தனர்.
இதனால் இந்த ஜோடியின் விவாகரத்து கிட்டத்தட்ட உண்மை தான் என்கிற அளவுக்கு போய் விவாகரத்து விவகாரம் காட்டுத்தீ போல் பரவிய நிலையில், அபிஷேக் பச்சன் தங்களது விவாகரத்து உண்மை தான் என பேசும்படியான வீடியோ ஒன்றும் வைரல் ஆனது.
இதைப்பார்த்த ரசிகர்கள் அதனை உண்மை என நம்பிய நிலையில் அது ஒரு போலியான வீடியோ என்பதும் டீப் ஃபேக் டெக்னாலஜியை பயன்படுத்தி சிலர் போலியாக அந்த வீடியோவை உருவாக்கி இருக்கின்றனர் என்றும் தெரியவந்தது.
இது தொடர்பாக நடிகர் அபிஷேக் பச்சனே சமீபத்திய நேர்காணல் ஒன்றில் இதுகுறித்து கூறி சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.
பாரிஸில் ஒலிம்பிக் போட்டியை காண சென்றிருக்கும் அவர், அங்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது..,
“அவர்களது திருமண மோதிரத்தை காட்டி நாங்கள் இன்றளவும் தம்பதிகளாக தான் இருக்கிறோம். இதைப்பற்றி நான் வேறு எதுவும் கூற விரும்பவில்லை.
நான் எதாவது கூறப்போய் அது வேறுவிதத்தில் சென்றுவிடும். நீங்கள் ஏன் இப்படி செய்கிறார்கள் என எனக்கு புரிகிறது. ஒரு பிரபலமாக இதை நான் ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும்” எனக் கூறி விவாகரத்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் அபிஷேக்.