தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர் செல்வோர் வசதிக்காக இன்றிரவு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக இந்தியன் ரயில்வே அறிவித்துள்ளது.
ஹிந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் வரும் 31 ஆம் தேதி ( நாளை ) கோலாகலமாக கொண்டாடபட உள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அனைத்து மாநில அரசுகளும் பொது மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்தும் பாதுகாப்பான முறையில் தீபாவளியை கொண்டாடவும் அறிவுறுத்தி வருகிறது.
Also Read : சேவாக் உடனான கசப்பான நினைவுகள் குறித்து மனம் திறந்த க்ளென் மேக்ஸ்வெல்..!!
இந்நிலையில் தீபாவளியை ஒட்டி சொந்த ஊர் செல்லும் மக்களின் வசதிக்காக முழுக்க முன்பதிவு இல்லா 3 சிறப்பு ரயில்கள் இன்று இரவு இயக்கப்பட உள்ளன.
(06155) எழும்பூரில் இருந்து இரவு 9.10 மணிக்கு விழுப்புரம், சிதம்பரம், தஞ்சை, வழியே திருச்சிக்கு சிறப்பு ரயில்
(06157) தாம்பரத்தில் இருந்து இரவு 12.30 மணிக்கு விழுப்புரம், விருதாச்சலம், அரியலூர் வழியே திருச்சிக்கு சிறப்பு ரயில்
(06159) சென்ட்ரலில் இருந்து இரவு 10.10 மணிக்கு அரக்கோணம், திருப்பத்தூர், திருப்பூர் வழியே கோவை போத்தனூருக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.