தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர் செல்வதற்காக அரசு பேருந்துகளில் நேற்று ஒரே நாளில் 35,140 பேர் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்துள்ளனர்.
அரசு பேருந்துகளில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வண்ணம் உள்ளது. நீண்ட தூரம் செல்லக்கூடிய விரைவு பேருந்துகளில் படுக்கை வசதியுடன் குளிர்சாதன வசதி உள்ளிட்டவை இருப்பதால் அதிகளவில் மக்கள் பயணிக்க தொடங்கி உள்ளனர்.
மேலும், அரசு விரைவு பேருந்துகளுக்கு 60 நாட்களுக்கு முன்னதாக முன்பதிவு செய்யும் நடைமுறையும் உள்ளது.
இந்த நிலையில், அடுத்த மாதம் அக்டோபர் 31-ஆம் தேதி (வியாழக்கிழமை) தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால், தீபாவளிக்கு சொந்த ஊர் செல்லக் கூடிய பயணிகள் கடந்த 1, 2-ஆம் தேதிகளில் முன்பதிவு செய்தனர். இதற்கான முன்பதிவு அக்டோபர் 28, 29 ஆகிய தேதிகளில் தொடங்கியது.
இதையும் படிங்க : September 05 Gold Rate : தங்கம் இன்றைய விலை?
அரசு பேருந்துகளில் பயணம் செய்ய நேற்று ஒரே நாளில் 35,140 பேர் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்துள்ளனர். இதற்கு முன்பு 2018 ஜன.12ல் அதிகபட்சமாக 32,910 பேர் முன்பதிவு செய்திருந்த நிலையில், தற்போது அதை விட அதிக பயணிகள் முன்பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
எனவே, தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய அனைத்து பேருந்துகளும் நிரம்பி விட்டன. அதே போல பண்டிகை முடிந்து நவம்பர் 3-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அங்கிருந்து புறப்பட்டு சென்னைக்கு வருவதற்கும் பெரும்பாலான இடங்கள் நிரம்பி விட்டன.
1,500 பஸ்களுக்கு முதல் கட்டமாக முன்பதிவு நடந்து வருகிறது. இது தவிர வழக்கம் போல சிறப்பு பஸ்களும் அறிவிக்கப்பட உள்ளது.