என் மண் என் மக்கள் என்ற பெயரில் இன்று தமிழ்நாடு முழுவதும் நடைபயணம் மேற்கொள்ள இருக்கும் அண்ணாமலையின் நடைபயணத்தில் தேமுதிக பங்கேற்கும் என தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்
விரைவில் நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தமிழகத்தில் பாஜவை பலப்படுத்தும் நோக்கத்தின் முக்கிய பகுதியாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று தமிழ்நாடு முழுவதும் நடை பயணம் மேற்கொள்கிறார்.
என் மண் என் மக்கள் என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் நடைபயணம் மேற்கொள்ள இருக்கும் . அண்ணாமலையின் நடைபயணத்தை ராமேஸ்வரத்தில் இருந்து உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று மாலை தொடங்கி வைக்க உள்ளார் .
இதையடுத்து அண்ணாமலை மேற்கொள்ளும் இந்த நடைப்பயணத்தின் தொடக்க விழாவில் கலந்துகொள்ள பல கட்சிகளுக்கு தமிழ்நாடு பாஜக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்து . அந்தவகையில் தேமுதிக கட்சிக்கும் அழைப்பு விடுக்கப்பட்ட்டது .
இந்நிலையில் அண்ணாமலை மேற்கொள்ளும் நடைப்பயணத்தின் தொடக்க விழாவில் தேமுதிக பங்கேற்கும் என தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் தெரிவித்துள்ளார் இதுக்குறித்து கேப்டன் விஜயகாந்த் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது :
தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ராமேஸ்வரத்தில் இருந்து இன்று நடைபயணம் தொடங்குகிறார். அவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆதரவு கோரினார். மாநில துணை செயலாளர் திரு.கரு. நாகராஜன் நேரடியாக வந்து அழைப்பிதழை வழங்கினார்.
மரியாதை நிமித்தமாக தேமுதிக சார்பில், ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் திரு. சிங்கை ஜின்னா மற்றும் கழகத்தினர், இந்த நடைபயண துவக்க விழாவில் கலந்து கொள்கிறார்கள். அவரது நடைபயணம் வெற்றி பெற எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என கேப்டன் விஜயகாந்த் தெரிவித்துள்ளார் .