அனைத்து மாவட்டங்களிலும் செப்.14-ஆம் தேதி பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும் – தேமுதிக அறிவிப்பு

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தொடக்க நாளை முன்னிட்டு அனைத்து மாவட்டங்களிலும் செப்.14-ஆம் தேதி பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதுகுறித்து தேமுதிக சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிருப்பதாவது :

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் 19 ஆம் ஆண்டு தொடக்க விழா வரும் 14 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கட்சியின் தொடக்க நாள், கட்சியின் கொள்கை விளக்கம் மற்றும் விஜயகாந்த் பிறந்தநாள் விழா ஆகியவற்றை சிறப்பாககொண்டாடுமாறு கட்சி நிர்வாகிகள்,தொண்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அந்தவகையில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கட்சிக் கொடி ஏற்றுதல், நலத்திட்ட உதவிகள் வழங்குதல் உள்ளிட்டவற்றை நடத்தி, 14 ஆம் தேதி மாலை 4 மணிக்கு மாபெரும் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன. இதில் கலந்துகொள்பவர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அந்த வகையில், மதுரை மாவட்டத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமை தாங்கி உரையாற்றுகிறார்.

  • செங்கல்பட்டு மாவட்ட பொதுக்கூட்டத்தில் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் பங்கேற்கிறார்.
  • திண்டுக்கல் மாவட்டத்தில் கட்சி அவைத் தலைவர் வி.இளங்கோவன்
  • திருவண்ணாமலை – துணை செயலாளர் பார்த்தசாரதி
  • காஞ்சிபுரம் – இளைஞர் அணி செயலாளர் கு.நல்லதம்பி
  • சென்னை – இளைஞர் அணி துணை செயலாளர் எம்விஎஸ் ராஜேந்திரநாத் ஆகியோர் தலைமை வகித்து பேச உள்ளனர் என தேமுதிக சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Total
0
Shares
Related Posts