”ஜெகன் பாண்டியன் மறைவு..” நேரில் அஞ்சலி செலுத்தி.. திமுகவிற்கு எச்சரிக்கை விடுத்த அண்ணாமலை!!

நெல்லை பாஜக பிரமுகர் ஜெகன் பாண்டியன்மரணத்துக்குக் காரணமானவர்கள் யாராக இருந்தாலும் எங்கே இருந்தாலும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க முடியாது என்று அண்ணாமலை எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நெல்லை பாளையங்கோட்டை பகுதியில் பிரமுகர் ஜெகன் பாண்டியன் ரியல்எஸ்டேட் தொழில் செய்துவரும் நிலையில் கடந்த ஆகஸ்ட் 31 ஆம் தேதி பாளையங்கால்வாய் அருகே அடையாளம் தெரியாத மர்ப கும்பல் அவரை சரமாரிய வெட்டிவிட்டு தப்பி சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று ஜெகன் பாண்டியன் உடலுக்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,

திமுகவினரால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட திருநெல்வேலி வடக்கு மாவட்ட பாஜக இளைஞரணி பொதுச் செயலாளர் சகோதரர் ஜெகன் பாண்டியன் அவர்கள் இல்லத்துக்குச் சென்று, அவரது தாயாருக்கும், குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்தோம்.

சகோதரர் ஜெகன்பாண்டியன் இழப்பு, கட்சிக்கும் சமூகத்துக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு. சகோதரர் ஜெகன்பாண்டியன் குடும்பத்தினருடன், பாஜக என்றும் உறுதுணையாக இருக்கும் என்றும், சகோதரர் ஜெகன்பாண்டியன் இடத்திலிருந்து பாஜக சார்பாக, அவரது தாயாருக்குச் செய்ய வேண்டிய கடமையாக, வீடு கட்டித் தருவோம் என்றும் உறுதியளித்தோம்.

சகோதரர் ஜெகன்பாண்டியன் அவர்களை கடந்த மாதம், என் மண் என் மக்கள் பயணத்தில் சந்தித்தபோது, கட்சிப் பணிகளிலும் சமூகப் பணிகளிலும் அவரது சுறுசுறுப்பும், நற்பண்புகளும் என்னைக் கவர்ந்தது.

பொதுமக்களிடையேயும் அவரது அயராத சமூகப் பணிகள் மூலம் குறிப்பிடத்தக்க இடம் பிடித்திருந்தார். அவர் வளர்ச்சியைக் கண்டு பயந்த திமுக, அவரை வன்முறையால் வீழ்த்தியிருக்கிறது. அவர் மரணத்துக்குக் காரணமானவர்கள் யாராக இருந்தாலும் எங்கே இருந்தாலும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க முடியாது என்பதைக் கூறிக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Total
0
Shares
Related Posts