DMK corruption-ராணிப்பேட்டை சட்டமன்றத் தொகுதி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நடைபயணம் மேற்கொண்டார் அப்போது மக்களிடையே பேசிய அவர்.
மக்களுக்கு கொடுத்த வேட்டியில் 78 சதவீதம் பாலியஸ்டர் வெறும் 22 சதவீதம் மட்டுமே பருத்தி இருப்பது தெரியவந்துள்ளது. அமைச்சர் காந்திக்கு அவரது பெயர் சற்றும் பொருத்தமற்றது.
1994 ஆம் ஆண்டு, கள்ளச்சாராயம் காய்ச்சிய வழக்கில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தவர்.
தற்போது திமுக ஆட்சியில் ஊழல் செய்து பணம் குவித்துக் கொண்டிருக்கிறார். இலவச வேட்டி சேலை வழங்குவதில், பெருமளவில் ஊழல் நடந்திருக்கிறது.
தமிழக அரசை நடத்த, கருவூலத்தில் பணம் இல்லை. ஏனென்றால், எட்டு லட்சம் கோடி ரூபாய் கடனில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது தமிழக அரசு.
திமுக ஆட்சிக்கு வந்து 32 மாதங்களில், இரண்டு லட்சத்து அறுபத்தி ஒன்பதாயிரம் கோடி புதிய கடன் வாங்கியுள்ளது.
தமிழகத்தின் ஒவ்வொரு ரேஷன் அட்டையின் மீதும், ஒவ்வொரு குடும்பத்தின் மீதும், மூன்று லட்சத்து இருபதாயிரம் ரூபாய் கடன் சுமை இருக்கிறது.
இன்னும் ஒரு ஆண்டில் அரசு ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்கவே பணம் இல்லாத நிலை வரப் போகிறது. அனைத்துக்கும் காரணம், எல்லா துறைகளிலும் திமுகவின் ஊழல் செய்து கொண்டு இருக்கிறது என்று பேசியிருந்தார்.
இந்த நிலையில் பொங்கல் தொகுப்பில் வழங்கப்பட்ட வேட்டி, பாலியஸ்டர் நூலில் தயாரித்து மக்களை திமுக ஏமாற்றி உள்ளது.
இதையும் படிங்க: vijay political-”தமிழக வெற்றி கழகம் ..”முதல்வர் ஸ்டாலின் கொடுத்த Reaction!
இது குறித்து அண்ணாமலை ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது: நேற்றைய தினம், ராணிப்பேட்டை சட்டமன்றத் தொகுதி பயணத்தின்போது, தமிழக கைத்தறித் துறை
அமைச்சர் திரு. காந்தி அவர்களின் விஞ்ஞானப்பூர்வமான புதிய ஊழல் ஒன்றை மக்கள் மத்தியில் வெளிப்படுத்தினோம்.
அமைச்சர் காந்தியின் பெயருக்கும் அவரது செயல்பாடுகளுக்கும் பொருத்தமே கிடையாது. நெசவுத் தொழிலாளர்களிடம் வேட்டி, புடவை கொள்முதலுக்கு கமிஷன் கேட்பதால் கமிஷன் காந்தி என்றழைக்கப்படும் இவர்,
பொங்கல் தொகுப்பில் இலவச காட்டன் வேட்டி சேலை வழங்குவதிலும் ஊழல் செய்திருக்கிறார். விஞ்ஞானத் திருட்டில் திமுகவை மிஞ்ச இந்த உலகத்திலேயே ஆள் கிடையாது.
வழக்கமாக வேட்டி நெசவு செய்ய பருத்தி நூல் மட்டுமே பயன்படுத்தப்படும், இந்த ஆண்டு பருத்தி நூல் குறைவாகவும் பாலியஸ்டர் நூல் அதிகமாகவும் பயன்படுத்தி நெசவு செய்துள்ளனர்.
கிலோ ₹320 வரை விற்கப்படும் பருத்தி நூலை வாங்காமல், அதில் பாதி விலையான ₹160க்கே கிடைக்கும் பாலியஸ்டர் நூலில் வேட்டி தயாரித்து மக்களை ஏமாற்றி உள்ளனர்.
பொங்கல் தொகுப்பில் வழங்கப்பட்ட ஒரு வேட்டியை, கோவையில் உள்ள ஜவுளி ஆராய்ச்சி மையத்தில் கொடுத்து சோதனை செய்து பார்த்ததில்,
இவர்கள் மக்களுக்கு கொடுத்த வேட்டியில் 78 சதவீதம் பாலியஸ்டர் வெறும் 22 சதவீதம் மட்டுமே பருத்தி இருப்பது தெரியவந்துள்ளது.
உற்பத்தி செலவைக் குறைத்துவிட்டு, பெரிய அளவில் DMK ஊழல் (DMK corruption) செய்திருக்கிறார்கள்.கோவை ஜவுளி ஆராய்ச்சி மைய சோதனை முடிவுகள் இதோ என்று குற்றம் சாட்டியுள்ளார்.
PUBLISHED BY : S.vidhya