DMK’s election manifesto : திமுக கூட்டணியில் காங்கிரஸ், விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், மனிதநேய மக்கள் கட்சி, கொங்குமக்கள் தேசிய கட்சி, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்டவை உள்ளன.
திமுக, தன்னுடைய கூட்டணி கட்சிக்கு 19 தொகுதிகளை விட்டுக் கொடுத்துள்ளது. மீதமுள்ள 21 தொகுதிகளில் திமுக நேரடியாக போட்டியிடுகிறது.
கடந்த 2019ஆம் ஆண்டு கூட்டணி கட்சிகளுக்கு 20 இடங்களை ஒதுக்கிய நிலையில் இந்த முறை ஒரு இடம் குறைத்து ஒதுக்கீடு செய்துள்ளது.
இதில், காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரியோடு சேர்த்து 10 தொகுதிகளும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2,
கொங்கு நாடு தேசிய கட்சி, முஸ்லீம், லீக் ஆகியவற்றிற்கு தலா 1 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், கூட்டணியில் உள்ள நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு 1 ராஜ்ய சபா சீட் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : வெளியானது திமுக வேட்பாளர் பட்டியல்! இளைஞர்களுக்கு வாய்ப்பு!
இதில், விசிக, மதிமுக, இந்திய முஸ்லீம் லீக் ஆகியவை தனிச் சின்னத்தில் போட்டியிடுகின்றன. ஈஸ்வரனின் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி நாமக்கல் தொகுதியில் திமுக சின்னத்தில் அதாவது உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறது.
திமுக 21 தொகுதிகளில் நேரடியாக போட்டியிடுகிறது. ஏற்கனவே திமுகவின் கூட்டணிக்க் அட்சிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை அறிவித்துள்ள நிலையில்,
அண்னா அறிவாலயத்தில் வைத்து திமுக சார்பாக போட்டியிடும் 21 தொகுதிகளின் வேட்பாளர் பட்டியலையும் அறிவித்தார் மு.க.ஸ்டாலின்.
அதன் தொடர்ச்சியாக கனிமொழி தலைமையிலான திமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவினர் சமர்ப்பித்திருந்த தேர்தல் வாக்குறுதிகளையும் வெளியிட்டார் ஸ்டாலின். அந்த அறிக்கையில் DMK’s election manifesto,
“உச்ச நீதிமன்றத்தின் கிளை சென்னையில் அமைக்கப்படும், புதுச்சேரிக்கு மாநிலத் தகுதி வழங்கப்படும், திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்கப்படும் , புதிய கல்விக் கொள்கை ரத்து செய்யப்படும், குடியுரிமை திருத்தச் சட்டம்-2019 ரத்து செய்யப்படும்,
இந்திய அளவில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும், ஜி.எஸ்.டி சட்டத்தில் சீர்திருத்தம் கொண்டு வரப்படும், மாநிலங்கள் சுயாட்சி பெரும் வகையில் அரசியலமைப்பு சட்டம் திருத்தப்படும், ஆளுநர்களுக்கு அதிக அதிகாரம் வழங்கும் சட்ட பிரிவு நீக்கப்படும்,
திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்கப்படும், மத்திய அரசு அலுவலங்களில் தமிழ் பயன்படுத்தப்படும், இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும்,
காலை உணவு திட்டம் இந்தியா முழுவதும் விரிவுபடுத்தப்படும், விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உறுதி செய்யப்படும்” என்ற வாக்குறுதிகளும்,
“நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகள் அகற்றப்படும், நீட் தேர்வு ரத்து செய்யப்படும், மகளிர் சுய உதவிக்குழுவிற்கு ரூபாய் 10,00,000 லட்சம் ரூபாய் வரை வட்டியில்லாக் கடன் வழங்கப்படும்,
மாணவர்களுக்கு வட்டி இல்லா கல்விக் கடன் 4 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படும், 100 நாள் வேலை திட்டம் 150 நாளாக மாற்றப்படும், தமிழ்நாட்டில் புதிதாக IIT, IIM அமைக்கப்படும்,
பெட்ரோல் விலை 75 ரூபாயும், டீசல் 65 ரூபாயும், சிலிண்டர் விலை 500 ரூபாயும் குறைக்கப்படும், நாடு முழுவதும் மாணவர்களின் கடன் ரத்து செய்யப்படும்” உள்ளிட்ட தேசிய அளவிலான வாக்குறுதிகளும் அளிக்கப்பட்டுள்ளன.
முன்னதாக, நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு தமிழ் நாட்டின் பல பகுதிகளுக்கும் பயணம் செய்து தொழிற்துறையினர், கல்வியாளர்கள், மீனவர்கள், சிறுகுறு தொழில் முனைவோர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்,
மாணவர் சங்கங்கள், சூழலியலாளர்கள், மருத்துவர்கள், தொண்டு நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்கள், பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும்,
நேரடியாக சந்தித்து அவர்களின் கருத்துகளைப் பெற்று அதன் அடிப்படையில் கனிமொழி தலைமையில் இந்த தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பொதுவாக இது மாதிரியான பாராளுமன்ற தேர்தலின் போது மாநில காட்சிகள் அனைத்தும் தங்கள் மாநிலம் சார்த்த பிரச்சனைகள் குறித்து தேர்தல் அறிக்கை வெளியிடுவது வழக்கம்.
ஆனால், திமுக வெளியிட்டுள்ள இந்த அறிக்கையோ ஒட்டுமொத்த இந்தியாவிற்க்குமாக சேர்த்து வாக்குறுதிகளை கொடுத்திருப்பதாகவே பலரும் கூறுகின்றனர்.
இதையும் படிங்க : சொன்னதை செய்வோம்; செய்வதை சொல்வோம்: மு.க. ஸ்டாலின்