பேரறிஞர் அண்ணாவின் 55-வது நினைவு தினத்தை முன்னிட்டு தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமையில் திமுகவினர் அமைதி பேரணி (dmks peace rally) நடத்தினர்.
தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சரும், தி.மு.க. நிறுவனருமான பேரறிஞர் அண்ணாவின் 55வது நினைவு தினம் இன்று(பிப்.3) அனுசரிக்கப்பட்டு வருகிறது.
சென்னையில் உள்ள அவரது நினைவிடத்தில் திமுக அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சி நிர்வாகிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் அண்ணாவின் 55-வது நினைவு தினத்தை முன்னிட்டு தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமையில் திமுகவினர் அமைதி பேரணி நடத்தினர்.
முன்னதாக தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமையில் தி.மு.க.வினரின் அமைதிப்பேரணி நடைபெறும் என தி.மு.க சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டத்து.
அதன்படி, இன்று தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமையில் அமைதிப் பேரணி (dmks peace rally) நடைபெற்றது.
திருவல்லிக் கேணி – வாலாஜா சாலையில் உள்ள விருந்தினர் மாளிகை’ அருகில் தொடங்கிய, இந்த அமைதிப்பேரணி மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடம் வரை நடைபெற்றது.
அண்ணா நினைவிடத்திற்குச் சென்ற தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் அண்ணா நினைவிடத்தில் மலர்வளையம் வைத்தும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
https://x.com/ITamilTVNews/status/1753648031034179866?s=20
அவரைத் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் மற்றும் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்கள்.
அபோது, பேரறிஞர் அண்ணா காட்டிய வழியில் தமிழ்நாட்டின் உரிமைகளை வென்றெடுக்க மாநில சுயாட்சிக்கு ஊறு விளைவிக்கும் பாசிஸ்ட்டுகளை வீழ்த்த, அண்ணாவின் நினைவு நாளான இன்று உறுதியேற்போம் என்று அமைச்சர் உதயநிதி கூறியுள்ளார்.
இதையும் படிங்க : Headlines : இன்றைய தலைப்புச் செய்திகள்
இந்த அமைதிப் பேரணியில் உதயநிதி ஸ்டாலின், ஆர் பாலு, திமுக துணை பொதுச் செயலாளர்கள் அ.ராசா எம்.பி, கனிமொழி எம்பி, ஐ பெரியசாமி, கே என் நேரு, எ.வ வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்,
மா சுப்பிரமணியன், காந்தி, செஞ்சி மஸ்தான், சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் , சி வெ கணேசன், ராஜகண்ணப்பன் மற்றும் கட்சியின் அனைத்து பிரிவு நிர்வாகிகள், அணி நிர்வாகிகள், தொண்டர்கள் என பலர் பங்கேற்றனர்.