துளசி ஆன்மிக வழிபாட்டிற்கு சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதபடுகிறது. துளசி செடியில் செல்வத்தின் தெய்வமாக லக்ஷ்மி தேவி வாசம் செய்வதால் புனிதமானதாக கருதப்படுகிறது. நிதி சிக்கல்களை அதிகம் சந்திப்போர் , துளசி செடியை லட்சுமி தேவியாக நினைத்து வழிபடுவது சிறந்த செல்வசெழிப்பை வாழ்வில் கொண்டு வரும் என்று நம்பப்படுகிறது.
தினசரி தீபம் ஏற்றி கடவுளையே வழிபடும் பல மக்கள் துளசி செடி வைத்து பராமரித்து அதனையும் தெய்வமாக வழிபடுவதை நாம் பார்த்திருப்போம்.துளசியின் அருகில் எந்த பொருட்களை வைக்க வேண்டும், வைக்க கூடாது என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.
சிவலிங்கம்:
வாஸ்து சாஸ்திரத்தின்படி துளசி செடிக்கு அருகில் சிவன் அல்லது சிவலிங்கத்தை தவறுதலாக வைக்க கூடாது. இந்து மத நம்பிக்கையின் அடிப்படையில் விஷ்ணு பெருமானுக்கு துளசி மிகவும் பிடித்தமானது. அதே போல புராணங்களின் படி, தனது முந்தைய ஜென்மத்தில் பிருந்தா என்ற பெயரை கொண்டிருந்த துளசி ஜலந்தர் என்ற அரக்கனின் மனைவியாக இருந்ததாகவும், அரக்கன் ஜலந்தரின் கொடுமையை முடிவுக்கு கொண்டு வர சிவன் அந்த அரக்கனை வதைத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த துளசி சிவபெருமானை தன்னுடைய இலைகள் கொண்டு வழிபடக்கூடாது என சபித்தாக கூறப்படுகிறது.
விநாயகரின் சிலை:
புராண கதைகளின்படி, நதிக்கரையில் தவம் இருந்த விநாயகரின் அழகில் மயங்கிய துளசி தனது காதலையும், திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற விருப்பத்தையும் அவரிடம் தெரிவித்தார். ஆனால் விநாயகரோ துளசியின் ஆசையை நிராகரித்து விட்டார் இதனால் கோபம் கொண்ட துளசி விநாயகர் விரும்பியபடி அவருக்கு திருமணம் நடக்காது என்று சபித்தார். இதனால்தான் துளசிக்கு அருகில் விநாயகர் சிலையை வைப்பதோ அல்லது விநாயகருக்கு துளசியை அர்ச்சனை செய்வதோ இல்லை.
துடைப்பம்:
மத நம்பிக்கைகளின் படி, துளசி செடிக்கு அருகில் துடைப்பத்தை தவறுதலாக கூட வைக்க கூடாது, ஏனெனில் வீட்டில் இருக்கும் குப்பைகளை அப்புறப்படுத்தி வீட்டை சுத்தம் செய்யவே விளக்குமாறு பயன்படுத்துகிறோம். துளசி செடி புனிதமானது மற்றும் வணங்கத்தக்கது. எனவே துளசி செடிக்கு அருகில் விளக்குமாறு வைத்தால் வீட்டிற்கு வறுமை வந்து சேரும் என்பது நம்பிக்கை.
காலணிகள்:
வாஸ்து சாஸ்திரத்தின்படி ஷூக்கள் மற்றும் செருப்புகளை புனிதமான துளசி செடிக்கு அருகில் வைக்க கூடாது. துளசிக்கு அருகில் காலணிகளை வைப்பது லட்சுமி தேவியை அவமதிப்பதாக கருதப்டுகிறது மற்றும் இதனால் லட்சுமி அன்னை கோபமடைவார். இதனால் ஒருவர் நிதி நெருக்கடிகளை சந்திக்க நேரிடும். தவிர காலணிகள் மற்றும் செருப்புகள் ராகு மற்றும் சனி அடையாளங்களாக கருதப்படுகின்றன.