கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் கடைகளில் 3 நாட்களில் ரூ.154.78 கோடிக்கு மது விற்பனை ஆகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கிறிஸ்துவர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான கிறிஸ்துமஸ் பண்டிகையை நாடு முழுவதும் டிசம்பர் 25 ஆம் தேதி நேற்று கோலாகலமாக கொண்டாடபட்டது.
இதில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் விறபனையான மதுபானங்களின் வசூல் விவரம் தற்போது வெளியாகி உள்ளது.
கேரளாவில் கிறிஸ்துமசுக்கு முந்தைய 3 தினங்களில் (டிச. 22,23,24) ஆகிய தேதிகளில் மதுபான சில்லறை கடைகள் மூலம் 154.78 கோடிக்கு மது விற்பனை ஆகி உள்ளது .
டிசம்பர் 24ம் தேதி மட்டும் 70.74 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது என கேரள மதுபான கழகம் (பெவ்கோ) தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு 144.91 கோடிக்கு மது விற்பனையாகி இருந்தது எனவும் புள்ளிவிவரம் வெளியிடப்பட்டுள்ளது.