உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் கடந்த 9 ஆம் தேதி வெளியாகி வெற்றி நடை போட்டு வரும் ‘லால் சலாம்’ திரைப்படத்தின் (lal salaam collection) வசூல் விவரம் வெளியாகி உள்ளது.
விஷ்ணு விஷால், விக்ராந்த் கூட்டணியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அன்புமகளான ஐஸ்வர்யாவின் மிரட்டலான இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லால் சலாம்’.
கிரிக்கெட்டை மைய்யமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு சூப்பரான கேமியோ ரோலில் நடித்துள்ளார் .
இப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் டப்பிங் பணிகள் முடிவடைந்த நிலையில் பாடல் மற்றும் ட்ரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தலைவரின் இந்த படம் வெளியாகும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில்
இப்படம் பிப் 9 ஆம் தேதி வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
ரசிகர்களின் ஆசையை பூர்த்தி செய்யும் வகையில் லால் சலாம் படத்தின் ட்ரைலரை சில நாட்களுக்கு முன் படக்குழு வெளியிட்டது .
பின்னர் ரசிகர்களின் இத்தனை நாள் காத்திருப்புக்கு பின் ஒரு வழியாக லால் சலாம் படம் கடந்த 9 தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் கோலாகலமாக வெளியானது.
படத்தின் ஆரம்பம் முதல் திகிலூட்டும் காட்சிகளை காட்டியுள்ள படக்குழு விளையாட்டு மோதல் , சாதி கலவரம் உள்ளிட்ட பல முக்கிய சமூக பிரச்சனைகள் குறித்து அனைவர்க்கும் புரியும்படி பேசியுள்ளது தெளிவாக தெரிகிறது.
இப்படத்தில் மொய்தின் பாயாக வரும் ரஜினிகாந்தின் காட்சிகள் திரையரங்குகளை அலறவிட்டுள்ளது தலைவர் வரும் ஒவ்வரு காட்சிக்கும் விசில் சத்தம் காதை கிழித்தது .
தலைவரை 20 வருடங்களுக்கு முன் பார்ப்பது போல் இருப்பதாகவும் வயசானாலும் அவரிடத்து ஸ்டைல் கொஞ்சம் கூட குறையவே இல்லை என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
Also Read : https://itamiltv.com/suriya-exit-from-vaadivasal-movie/
இந்நிலையில் இப்படம் (lal salaam collection) வெளியாகி 2 நாட்கள் ஆன நிலையில் படத்தின் வசூல் குறித்த விவரம் வெளியாகி உள்ளது.
அதன்படி இப்படம் வெளியான முதல் நாளில் ரூ.3.55 கோடி வசூல் செய்தது. இந்த நிலையில் 2-வது நாளில் சுகுமார் ரூ.3 கோடி வசூல் ஆகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.