சூரியின் எதார்த்த நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற கருடன் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி நாயகனாக நடித்துள்ள திரைப்படமே கருடன். இப்படத்தில் சூரியுடன் சேர்ந்து சசிகுமார், உன்னி முகுந்தன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார்.
Also Read : பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி நீட்டிப்பு – ஜவாஹிருல்லா காட்டம்
இப்படமா திரையரங்குகளில் வெளியான நாள் முதல் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருவதால் பாக்ஸ் ஆபிஸில் அப்படத்தின் வசூலும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருந்தது .
இன்னும் தெளிவாக சொல்லவேண்டும் என்றால் ரஜினிகாந்தின் லால் சலாம் திரைப்படத்தை விட சூரியின் அதிக வசூல் ஈட்டி மாஸ் காட்டியுள்ளது.
இந்த நிலையில் ‘கருடன்’ படத்திற்கு கிடைத்த வரவேற்பையடுத்து இப்படம் நாளை ( ஜூலை 3 ) அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.