வாழை’யை சொல்லி கோழைகளாக்க வேண்டாம் என வாழை திரைப்படம் குறித்து புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி போட்டுள்ள பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி செல்வராஜ் .
படிப்பறிவு , நாகரிக வளர்ச்சி , சமூக நீதி உள்ளிட்ட நாட்டுக்கு தேவையான விஷயங்களை இன்றைய தலைமுறைகளுக்கு விழிப்புணர்வாய் கொண்டு சேர்க்கும் படங்களை தொடர்ந்து இயக்கி வரும் இவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான திரைப்படம் மாமன்னன் .
இதையடுத்து இவரது இயக்கத்தில் அடுத்ததாக திரைக்கு வந்துள்ள படமே வாழை . கிராமத்து மனம் மாறாத இப்படத்தில் கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி, பிரியங்கா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
Also Read : விநாயகர் சதுர்த்தி : வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட காவல்துறை..!!
சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகி உள்ள இந்த படம் பட்டிதொட்டி எங்கும் அமோக வரவேற்பை பெற்று வரும் நிலையில் இப்படத்தை திரைநட்சத்திரங்கள் , அரசியல் தலைவர்கள் என பலரும் பாராட்டி வருகின்றனர்.
அந்தவகையில் தற்போது வாழை படம் குறித்து புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி போட்டுள்ள பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
இதுகுறித்து கிருஷ்ணசாமி போட்டுள்ள பதிவில் கூறிருப்பதாவது :
தனது இழந்த அடையாளத்தை – அதிகாரத்தை மீட்கப் போராடுகின்ற ஒரு சமுதாயத்தை பெருமைப்படுத்த முயற்சி செய்ய முடியாமல் போய் இருக்கலாம்; ஆனால், அந்த சமுதாயத்தை இன்னும் கூலிக்காரர்களாகவே’ சித்தரித்துச் சிறுமைப்படுத்துகின்ற போக்கும், அவர்களின் போராட்ட உணர்வுகளையும் குணங்களையும் மழுங்கடித்து யார் யாருடைய அரசியல் லாபங்களுக்காகவோ புதிய களம் அமைத்துக் கொடுக்கக்கூடிய விதம் எவ்விதத்திலும் ஏற்புடையதல்ல.
பாராட்ட நினைக்கிறேன்; பாராட்டவும் முடியவில்லை; திட்ட நினைக்கிறேன்; திட்டவும் முடியவில்லை என
கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.