“ஓடிடி-யில் வெளியாகிறது துல்கரின் ‘கிங் ஆஃப் கோதா” ரிலீஸ் தேதியை அறிவித்தது படக்குழு !!

துல்கர் சல்மான் நடிப்பில் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் ‘கிங் ஆஃப் கோதா” படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

தென்னிந்திய திரையுலகில் தனக்கென தனி இடத்தை பிடித்து முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் துல்கர் சல்மான் கேரளாவில் மாஸான நடிகராக வலம் வரும் இவருக்கு தமிழகத்திலும் மிக பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது .

அந்தவகையில் இவரது மிரட்டலான நடிப்பில் தமிழ் மலையாளம் என பல மொழிகளில் வெளியான படம் ‘கிங் ஆஃப் கோதா’

முழுக்க முழுக்க ஆக்சன் கதைக்களத்தில் உருவான இப்படம் கடந்த ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளில் வெளியானது. அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் உருவான இந்த படத்தில் துல்கருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லஷ்மி நடித்திருந்தார். மேலும் இவர்களுடன் செம்பன் வினோத் ஜோஸ், ‘சார்பட்டா பரம்பரை’ புகழ் ஷபீர், பிரசன்னா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

திரையரங்குகளில் இப்படத்தி பார்த்த ரசிகர்கள் கலவையான பல விமர்சனங்களை கொடுத்து வந்தாலும் படத்தின் வசூலுக்கு எந்த பாதிப்பும் இல்லை படம் ஹிட் என திரைத்துறை வட்டரங்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது . அதன்படி இப்படம் வரும் 29ஆம் தேதி பிரபல ஓடிடி தளமான டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் ரிலீஸ் ஆக உள்ளது. திரையரங்குளில் இப்படத்தை பார்க்க முடியாத துல்கர் சல்மானின் ரசிகர்கள் ஓடிடி-யில் கண்டு மகிழுங்கள்.

Total
0
Shares
Related Posts