அக்னிபாத் திட்டத்தில் பயிற்சி பெறும் வீரர்களுக்கு ஓட்டுநர், எலெக்ட்ரீசியன், முடி திருத்துதல், சலவை செய்தல் உள்ளிட்ட திறன் பயிற்சியும் வழங்கப்படும்” என ஓன்றிய அரசு கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
மத்திய பாஜக அரசு புதிய ராணுவ ஆட்சேர்பு கொள்கையான அக்னிபாத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் ராணுவத்துக்கு தேர்ந்தெடுக்கப்படுபவருக்கு 4 ஆண்டுகள் மட்டுமே பணி வழங்கப்படும்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த நான்கு நாட்களாக இந்தியா முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தில் பீகாரில் ரயிலுக்கு தீ வைத்த நிலையில், நேற்று தெலுங்கானாவின் செகந்திரபாத் ரயில் நிலையத்தில் நின்ற பயணிகள் ரயிலுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர்.
இந்த போராட்டத்தின்போது செகந்திரபாத்தில் பொராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் தீயாய் பரவியுள்ளது.
இந்த நிலையில், அக்னிபாத் திட்டத்தில் பயிற்சி பெறும் வீரர்களுக்கு ஓட்டுநர், எலெக்ட்ரீசியன், முடி திருத்துதல், சலவை செய்தல் உள்ளிட்ட திறன் பயிற்சியும் வழங்கப்படும். ராணுவத்தில் உள்ள இதர பணியிடங்களில் சேர இந்த திறன்கள் பயனுள்ளதாக இருக்கும்” என ஒன்றிய அமைச்சர் கிஷண் ரெட்டி தெரிவித்துள்ளார்.