பேருந்தை நிறுத்தாதமல் சென்றதால் மதுபோதையில் இருந்த பெண் பயணி கண்டக்டர் மீது பாம்பை வீசியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் மாவட்டம் நலகொண்டா பகுதியில் செயல்பட்டு வரும் அரசு பேருந்தில் நேற்று மாலை பெண் பயணி ஒருவர் ஏறியுள்ளார்.
அந்த பெண் மதுபோதையில் இருந்த நிலையில், வித்யாநகர் சிக்னலில் தன்னை இறக்கிவிடும்படி கூறியுள்ளார்.
ஆனால், அந்த பகுதியில் பேருந்து நிறுத்தம் இல்லாததால் அடுத்த நிறுத்தத்தில் இறங்கிக்கொள்ளும் படி அந்த பேருந்தினுள் இருந்த பெண் கண்டக்டர் கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த பெண் பயணி தான் சொன்ன நிறுத்தம் வந்தபோதும் பேருந்தை நிறுத்தாதமல் சென்றதால் பெண் கண்டக்டருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அதன் பின்னர், ஆத்திரமடைந்த அந்த பெண் பயணி தனது பையில் மறைத்து கொண்டு வந்த பாம்பை பெண் கண்டக்டர் மீது தூக்கி வீசியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த பெண் கண்டக்டரும், சக பயணிகளும் பேருந்திற்குள் அலறினர். அந்த சத்தம் கேட்டு பேருந்தை உடனடியாக டிரைவர் நிறுத்தினார்.
இதையடுத்து, பேருந்தில் இருந்து கீழே இறங்கிய அந்த பெண் பயணி மீண்டும் பேருந்து மீது கல்லை எடுத்து வீசினார். இதில் பேருந்தின் கண்ணாடி உடைந்தது.
பின்னர், அங்கிருந்து அப்பெண் தப்பியோடி விட்டார். இந்த சம்பவம் குறித்து பேருந்து கண்டக்டர் போலீசில் புகார் அளித்தார்.
அந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தப்பியோடிய பெண்ணை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட பெண்ணிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பெண்ணின் கணவர், பாம்புகளை பிடிக்கும் வேலை செய்து வருவது தெரியவந்தது.