கேரளாவின் வயநாடு பகுதியில் பெய்துவரும் கனமழையால் கர்நாடகாவின் கபிணி அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
தமிழகத்தின் நட்பு மாநிலமான கேரளாவில் தற்போது கனமழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் சொந்த தொகுதியான வயநாட்டின் நாட்டின் பல்வேறு பகுதியில் தொடர்ந்து கனமழை வெளுத்து வருவதால் கர்நாடகாவின் கபிணி அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
நேற்று விநாடிக்கு 4500 கன அடியாக இருந்த நீர் வரத்து இன்று காலை நிலவரப்படி 8200 கன அடியாக அதிகரித்துள்ளது
கபிணி, கே.ஆர்.எஸ். இரு அணைகளுக்கான நீர் வரத்து 12,300 கன அடியாக அதிகரித்துள்ள நிலையில், நீர் வெளியேற்றம் 3179 கன அடியாக தொடர்ந்து உள்ளது