தந்தை பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவதூறாக பேசியதாக கூறி பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் தற்போது அமைச்சர் துரைமுருகன் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :
பெரியாரின் கொள்கைகளே இன்றும் தமிழ்நாட்டை வழிநடத்துகின்றன. அதனால்தான் இதனை ‘பெரியார் மண்’ என்று சொல்கிறோம். சில மண்ணாந்தைகளுக்கு இது புரிவதில்லை.
பெரியார் சொல்லாதவற்றையும் கூட அவர் சொன்னதாக அபாண்டமாக அவதூறு பரப்புகிறார்கள்
யாருக்கோ ஏஜெண்ட்டாக இங்கே அரசியல் நடத்திக் கொண்டிருக்கும் தற்குறிகள், பெரியார் என்ற ஆலமரத்தின் மீது உரசிப் பார்க்கின்றன.
Also Read : பாலியல் குற்றவாளிகளின் சரணாலயம் அதிமுக – அமைச்சர் சிவசங்கர் காட்டம்..!!
மானமற்ற கூட்டத்துடன் நாம் மல்லுக்கட்ட வேண்டியதில்லை. மானமும் அறிவும் உள்ளவர்கள் பெரியாரை இழிவு செய்ய மாட்டார்கள்.
பெரியார் மீது அவதூறு பரப்பி விளம்பரம் தேட நினைக்கும் இழிவான – மலிவான அரசியல் பேர்வழிகளைப் புறக்கணிப்போம்.
தமிழ்நாட்டின் அமைதியைக் குலைக்கலாமா என நினைப்பார்களேயானால் சட்டம் தன் கடமையை நிச்சயம் செய்யும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.