விகரம் லேண்டரில் (vikram lander) உள்ள ILSA கருவி நிலவில் இயற்கையாக ஏற்பட்ட நிலஅதிர்வை பதிவு செய்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளார்.
நிலவின் தென்துருவ பகுதியை ஆராய்ச்சி செய்யும் நோக்கில் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி தலத்தில்கடந்த ஜூலை மாதம் 14ஆம் தேதி நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய சந்திரயான்-3, விண்ணில் ஏவப்பட்டது.
கிட்டத்தட்ட 40 நாள் பயணத்திற்கு பிறகு நிலவின் தென் துருவத்தில் ஆகஸ்ட் 23 ஆம் தேதி விக்ரம் லேண்டர் தரையிறங்கிது. பிறகு விக்ரம் லேண்டரிலிருந்து பிரக்யான் ரோவர் பிரிக்கபட்டு தொடர்ந்து நிலவில் ஆய்வு மேற்கொள்ள பத்து வருகிறது.
அந்த வகையில் நிலவின் மேற்பரப்பில் கந்தகம், அலுமினியம், இரும்பு, கால்சியம், குரோமீயம், மாங்கனீஸ்,சிலிகான்,டைட்டானியம் உள்ளிட்ட 8 தனிமங்கள் இருப்பதையும் கண்டறிந்துள்ளது. மேலும் ஆக்ஸிஜன் இருப்பதை உறுதி செய்துள்ள பிரக்யான் ஹைட்ரஜன் இருப்பதையும் தேடி வருவதாக இஸ்ரோ தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில்,இஸ்ரோ வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்,விக்ரம் லேண்டரில் உள்ள ILSA கருவி நிலவில் இயற்கையாக ஏற்பட்ட பூமியில் ஏற்பட்ட அதிர்வை பதிவு செய்துள்ளது.
இந்த அதிர்வு இந்த ஆண்டு ஆகஸ்ட் 26 ஆம் தேதி அன்று இயற்கையாக ஏற்பட்டஅதிர்வு ILSA கருவி மூலம் பதிவு என்று இஸ்ரோ தெரிவிதுள்ளது. மேலும் ரோவரின் செயல்பாடுகளையும் விக்ரமில் உள்ள சில கருவிகளையும் ILSA கருவி தொடர்ந்து கவனித்து வருவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.