இந்தோனேசியாவின் தெற்குப்பகுதியில் உள்ள மவுமேரா தீவு அருகே இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்தோனேசியாவின் மவுமேரா நகரின் வடக்குப்பகுதியிலிருந்து 100 கி.மீதொலைவில் இருக்கும் திமோர் நகரின் மேற்குப்பகுதியில் அமைந்திருக்கும் ப்ளோரஸ் தீவில் இன்று நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் 7.3 ரிக்டர் அளவில் பதிவானது என அமெரிக்க புவியியல் அமைப்பு தெரிவித்துள்ளது
இந்நிலையில் 7.3 ரிக்டர் அளவில் ஏற்பட்டுள்ள சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக ஆபத்தான சுனாமி அலைகள் எழக்கூடும் என்றும் இந்த அலைகள் 1,000 கி.மீ சுற்றளவில் எழக்கூடும்” என்றும் பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் விடுத்துள்ள அறிவிப்பில் எச்சரித்துள்ளது.
ஆனால், “ப்ளோரஸ் தீவை மையமாகக் கொண்டு கடற்பகுதியில் 12 கி.மீ ஆழத்தில் 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் இன்று காலை ஏற்பட்டது என்று அறிவித்துள்ள இந்தோனேசியா புவிவியல் அமைப்பு, இந்த நிலநடுக்கத்தால் சுனாமி அலைகள் ஏற்படலாம் என்பதால் கடற்கரை ஓரத்தில் வசிக்கும் மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என்றும் நிலநடுக்கத்தை மையமாக வைத்து 1000 கி.மீ பரப்பளவுக்கு மோசமான சுனாமி அலைகள் உருவாகலாம்” எனவும் தெரிவித்துள்ளது.
கடந்த 2004 மாறும் 2018ம் ஆண்டுகளில் நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட சுனாமியில் சிக்கி பலர் உயிரிழந்தனர் என்பது குறிப்படத்தக்கது.