ஆலப்புழா, கோட்டயம் மாவட்டங்களில் வாத்துகளுக்கு பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து அம்மாவட்டத்தில் இல்ல வாத்துகளை கொல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் பல்வேறு கோழி மற்றும் வாத்து பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன. இந்தநிலையில் அங்குள்ள வாத்துப்பண்ணை ஒன்றில் வாத்துகளுக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த கால்நடை மருத்துவர்கள் அந்த பறவைகளின் மாதிரிகளை கால்நடை ஆய்வகத்திற்கு அனுப்பி அந்த ஆய்வு செய்ததில் பறவைகளுக்கு பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது.
இது மனிதர்களையும் பாதிக்கும் என்பதால் ஏற்கனவே சில பண்ணைகளில் உள்ள பாதிக்கபபட்ட வாத்துக்கள் கொள்ளப்பட்ட நிலையில், ஆலப்புழாவில் 20,000 வாத்துகளையும், கோட்டயத்தில் 35,000 வாத்துகளையும் கொல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் இது போன்ற பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ள பகுதியில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் சுற்றளவில் பறவைகளின் இறைச்சி, முட்டைகள் விற்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்து உள்ளது. மேலும் பண்ணைகளில் உள்ள பறவைகளுக்கு நோய் பாதிப்பு இருப்பது தெரியவந்தால் உடனடியாக மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.