தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் இன்று காலை முதல் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
வேலூர் காந்தி நகரில் அமைச்சர் துரைமுருகன், கதிர் ஆனந்த் ஒரே வீட்டில் வசிக்கும் நிலையில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
துரைமுருகன் இல்லத்தில் அமலாக்கத் துறை சோதனை நடக்கும் நிலையில் அங்கு சிஆர்பிஎஃப் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
Also Read : அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!!
திமுக நிர்வாகி பூஞ்சோலை சீனிவாசன் வீடு உள்ளிட்ட இடங்களிலும் அமலாக்கத் துறை சோதனை நடத்தி வருகிறது.
2019 மக்களவைத் தேர்தலில் சீனிவாசன் வீட்டில் ரூ.11 கோடியை வருமான வரித் துறை கைப்பற்றியிருந்தது
அமைச்சர் துரைமுருகனுக்கு நெருக்கமானவர் பூஞ்சோலை சீனிவாசன் என்று கூறப்படுகிறது.
வேலூர் மாநகர திமுக விவசாய அணி அமைப்பாளராக பூஞ்சோலை சீனிவாசன் உள்ள நிலையில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளதால் அங்கு திமுகவினர் கூட்டம் கூட வாய்ப்பு உள்ளதால் பலத்த பாதுகாப்புடன் இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது.