Site icon ITamilTv

ஜானகி எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை தொடங்கி வைத்தார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி..!!

Janaki MGR

Janaki MGR

Spread the love

முன்னாள் முதலமைச்சர் ஜானகி ராமச்சந்திரனின் பிறந்தநாள் நூற்றாண்டு விழா அதிமுக சார்பில் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது .

சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் இன்று காலை 10 மணியளவில் இந்த விழாவை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

Also Read : பொங்கல் நாளன்று நடைபெற உள்ள CA தேர்வை ஒத்திவைக்க வேண்டும் – சு.வெங்கடேசன்

இதையடுத்து ஜானகி ராமச்சந்திரன் நூற்றாண்டு விழா மலரை எடப்பாடி பழனிசாமி. வெளியிட்டார் சிறப்பாக நடைபெற்று வரும் இந்த நிகழ்வில், விழா மலரை எம்ஜிஆரின் வளர்ப்பு மகள் சுதா பெற்றுக் கொண்டார்.

பின்னர் இந்த விழாவில் அதிமுகவின் கூட்டணி கட்சி தலைவர்கள் நேரிலும் காணொளி வாயிலாகவும் பங்கேற்று எம்ஜிஆர் மற்றும் ஜானகி குறித்து மனமகிழ்ந்து பேசி வருகின்றனர்.


Spread the love
Exit mobile version