தமிழக மக்கள் குறித்து மிகவும் கீழ்த்தனமாக பேசியுள்ள மத்திய பாஜக அமைச்சர் கே. ஷோபாவுக்கு (shoba) அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அண்மையில் நிகழ்ந்த பெங்களூரு ராமேஸ்வரம் கபே குண்டு வெடிப்பிற்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் தான் காரணம் என மத்திய பாஜக அமைச்சர் கே. ஷோபா பேசியிருப்பது தற்போது தமிழ்நாடு மக்கள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் மத்திய அமைச்சரின் இந்த பேச்சுக்கு தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் .
அந்தவகையில் தற்போது அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
இதுகுறித்து எடப்பாடி கே பழனிசாமி வெளியிட்டுள்ள கண்டன செய்தியில் கூறிருப்பதாவது :
தமிழ்நாட்டு மக்களை பொதுப்படையாக பயங்கரவாதிகள் போல சித்தரிக்கும் பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்த மத்திய அமைச்சர் கே.ஷோபா அவர்களின் வெறுப்புப் பேச்சுக்கு என்னுடைய கடும் கண்டனம்.
இதுபோன்ற பிரிவினைவாதப் பேச்சுக்களை இனியும் யாரும் பேசாத வண்ணம் (shoba) இந்திய தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டுமென்று வலியுறுத்துகிறேன் என எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள கண்டன செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.