மறைந்த நடிகரும் தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்தில் (eps at captain memorial) அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று நேரில் சென்று மரியாதை செலுத்தி உள்ளார்.
2024 மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான அதிமுக – தேமுதிக இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது .
இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பின் தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் வேட்பு ,மனு தாக்கல் செய்யும் பணி நேற்று துவங்கிய நிலையில் ஒவ்வரு தொகுதியிலும் வேட்ப்பாளர்கள் தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்து வருகின்றனர்.
இதனை முன்னிட்டு தேர்தலில் போட்டியிடும் தங்கள் வேட்பாளர்களின் பட்டியலை அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றாக வெளியிட்டு வருகின்றன .
அந்த வகையில், திமுக , அதிமுக ஆகிய 2 கட்சிகளுமே நேற்று தங்கள் வேட்பாளர் பட்டியலை வெளியிடுவதாக கூறப்பட்ட நிலையில் சொன்னது சொன்னபடி இரு கட்சிகளுமே தங்களது கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது .
சென்னை ராயப்பேட்டியில் உள்ள அதிமுக கட்சி தலைமையகமான எம்.ஜி.ஆர் மாளிகையில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டார்.
இதையடுத்து அதிமுக – தேமுதிக இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் நேற்று வெற்றிகரமாக கையெழுத்தானது .
இந்த கூட்டணியில் தேமுதிக-விற்கு மத்திய சென்னை, திருவள்ளூர், கடலூர், தஞ்சாவூர், விருதுநகர் ஆகிய 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
Also Read : https://itamiltv.com/edappadi-palaniswami-released-the-2nd-phase-candidate-list-of-aiadmk/
இந்நிலையில் மறைந்த நடிகரும் தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று நேரில் சென்று மரியாதை செலுத்தி உள்ளார்.
இதுமட்டுமின்றி திருச்சியில் வரும் 24ம் தேதி அதிமுக சார்பில் நடத்தப்படும் (eps at captain memorial) பொதுக்கூட்டத்தில், தேமுதிக, உள்பட அதிமுக கூட்டணி கட்சிகள் கலந்துகொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.