கலைஞருக்காக வெளியிடப்பட்டுள்ள நாணயத்தில் தான் ‘தமிழ் வெல்லும்’ என்ற எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளது. இதைக்கூட உணராமல் எடப்பாடி பழனிசாமி உளறியிருப்பதால் அவரை எந்த லிஸ்ட்டில் சேர்ப்பதில்லை எனப் புரியவில்லை என தி.மு.க எம்.பி ஆ. ராசா கண்டனம் தெரிவித்துள்ளார்.
கலைஞர் 100 ரூபாய் நாணயத்தில் இந்தியில் பெயர் அச்சிடப்பட்டுள்ளதாக விமர்சித்த அதிகமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பதிலடி கொடுத்துள்ள தி.மு.க எம்.பி ஆ. ராசா கூறியதாவது :
இந்தியாவில் உள்ள நாணயங்கள் எதுவாக இருந்தாலும் அதில் ஆங்கிலமும் இந்தியும் இருப்பது வழக்கம். எம்.ஜி.ஆருக்கு வெளியிடப்பட்ட நாணயத்திலும் இந்தி எழுத்துகள் இருந்தன.
Also Read : பாஜகவுடன் உறவா..? – எடப்பாடியின் பேச்சுக்கு முதலமைச்சர் விளக்கம்..!!
கலைஞருக்காக வெளியிடப்பட்டுள்ள நாணயத்தில் தான் ‘தமிழ் வெல்லும்’ என்ற எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளது. இதைக்கூட உணராமல் எடப்பாடி பழனிசாமி உளறியிருப்பதால் அவரை எந்த லிஸ்ட்டில் சேர்ப்பதில்லை எனப் புரியவில்லை.
அ.தி.மு.க.வைப் போல பா.ஜ.க.வுடன் கள்ளக்கூட்டணி வைக்க வேண்டிய அவசியம் எங்களுக்கில்லை. தி.மு.க. மீது பழி போட்டுத் திசை திருப்ப நினைக்கும் எடப்பாடி பழனிசாமியின் நாடகத்தை பொதுமக்கள் நம்பமாட்டார்கள். பதற்றத்தில் அவர் பேசுவதெல்லாம் பிதற்றலாக உள்ளது
“ஆதரித்தாலும், எதிர்த்தாலும் அதில் உறுதியாக இருக்கின்ற இயக்கம் திமுக என்பதை மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியே, மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் தலைமைப் பண்பு குறித்து பாராட்டியிருக்கிறார்;
அதே தலைமைப் பண்பையும் பக்குவமான அணுகுமுறையையும் இன்றைய திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினிடம் நிறைந்திருக்கிறது என தி.மு.க எம்.பி ஆ. ராசா தெரிவித்துள்ளார்.