itamiltv.com

“ஆன்லைனில் எந்த வாக்கையும் நீக்கமுடியாது” அடுத்த சில நிமிடங்களில் தேர்தல் ஆணையம் பதிலடி!

டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வாக்கு திருட்டு குறித்து புதிய ஆதாரங்களை வெளியிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், மொத்தம் 6018 வாக்குகளை அழித்துள்ளதாகவும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு இதில் தொடர்பு இருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

கர்நாடகாவில் குறிப்பாக காங்கிரஸ் வென்ற தொகுதிகளை குறிவைத்து, அங்குள்ள வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டதாக அவர் குற்றம்சாட்டினார். மேலும் இதற்க்கு 100% ஆதாரம் இருப்பதாகவும் ஆதாரம் இல்லாமல் தான் பேசமாட்டேன் எனவும் குறிப்பிட்டார்.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் திருடர்களை பாதுகாக்காமல் தரவுகளை கொடுங்கள் எனவும் ராகுல் கோரிக்கை விடுத்தார்.

இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு அடுத்த சில நிமிடங்களிலேயே தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது. ராகுல் காந்தியின் கூற்றுகள் “தவறானவை மற்றும் ஆதாரமற்றவை” என்று மறுத்துள்ளது.

இது இருந்து தேர்தல் ஆணையம் க்ஸ் தளத்தில், “ராகுல் காந்தி தவறாக கூறுவது போல, வாக்காளர் பட்டியலில் இருந்து எந்தவொரு வாக்கையும் ஆன்லைனில் பொதுமக்கள் நீக்க முடியாது. வாக்காளர் பட்டியல் திருத்தம் (Form 7) ஒரு கடுமையான செயல்முறையாகும், இது தேர்தல் ஆணையத்தின் மேற்பார்வையில் மட்டுமே நடக்கும்,” என்று ECI தெளிவுபடுத்தியது.

மேலும், “2023-ல் கர்நாடகாவின் ஆலண்ட் சட்டமன்றத் தொகுதியில் வாக்காளர்களை நீக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு தோல்வியடைந்தன, இதற்காக ECI-யே ஒரு FIR பதிவு செய்து விசாரணை தொடங்கியது” என்று கூறியுள்ளது.

இந்த விசாரணையில் முறைகேடு உறுதியாகவில்லை என்றும் ECI தெரிவித்த தேர்தல் ஆணையம், “ஆலண்ட் தொகுதியில் 2018-ல் பாஜகவின் சுபாத் குட்டேதர் வெற்றி பெற்றார், 2023-ல் காங்கிரஸின் பி.ஆர். பாட்டீல் வெற்றி பெற்றார்.

இந்தத் தேர்தல்களில் வாக்கு நீக்கம் தொடர்பாக எந்த ஆதாரமும் இல்லை,” என்றும் குறிப்பிட்டுள்ளது.

Exit mobile version