வேலூர் அருகே இரும்பு தடுப்பில் மின்சாரம் பாய்ந்து இரு இளைஞர்கள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
வேலூர் மாவட்டம் கணியம்பாடியை அடுத்த மேல்வல்லம் என்ற பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டின் மொட்டை மாடியின் முன்பகுதியில் இரும்பு தடுப்பு அமைக்கும் பணியில் இரு இளைஞர்கள் ஈடுபட்டிருந்துள்ளனர்.
Also Read : ‘விடாமுயற்சி’ படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியானது..!!
அப்போது இரும்பு தடுப்பு, அங்கே சென்ற மின்சார கம்பியில் உரசியதால் முகேஷ் (24), சதீஷ் (24) ஆகிய இருவர் மீதும் மின்சாரம் பாய்ந்துள்ளது . இந்த விபத்தில் இவர் இளைஞர்களும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இருவரது உடல்களையும் மீது பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இதையடுத்து இச்சம்பவம் குறித்து தாலுக்கா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.