elan musk plan cancel : டெஸ்லா கார் தயாரிப்பு ஆலை அமைப்பதற்கு இடங்களை ஆய்வு செய்யவும் பிரதமர் மோடியை சந்திப்பதற்காகவும் இந்தியாவுக்கு வருகை தர இருந்த எலான் மஸ்க் தனது பயணத்தை ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
உலக பணக்காரர்கள் பட்டியலில் டாப் 5 இடத்தில் ஒருவராக வலம் வருபவர் எலான் மஸ்க் . டெஸ்லா நிறுவனத்தின் சி.இ.ஓ.வாகவும், ‛எக்ஸ்’ வலைதளத்தின் உரிமையாளருமான எலான்மஸ்க், தனது கிளைகளை உலகின் பல நாடுகளில் வைத்து வெற்றிகரமான செல்வந்தராக இருக்கிறார்.
இந்நிலையில் தனது நிறுவனத்தின் கிளைகளை இந்தியாவில் தொடங்குவது தொடர்பாக இலான் மஸ்க் வரும் 22-ம் தேதி இந்தியாவுக்கு வருகை தர உள்ளதாக தனது ‛எக்ஸ்’ வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.
Also Read : https://itamiltv.com/change-in-indias-justice-system-3-new-criminal-laws-chandrachud/
இந்த வருகையின் போது பிரதமர் மோடியை சந்தித்து பேச உள்ளதாகவும் . இந்தியாவில் புதிய முதலீடுகள் மற்றும் புதிய தொழிற்சாலைகள் அமைப்பது குறித்து முக்கிய நபர்களுடன் விவாதிக்க உள்ளதாகவும் தனது பதிவில் எலான் மஸ்க் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நாளை மறுநாள் இந்தியாவுக்கு வருகை தர இருந்த எலான் மஸ்க் தனது பயணத்தை ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தவிர்க்க முடியாத காரணங்களால் இந்த பயணத்தை ஒத்திவைப்பதாகவும் (elan musk plan cancel) வேறொரு நாளில் இந்தியா வர ஆவலுடன் இருப்பதாகவும் மஸ்க் தனது ‛எக்ஸ்’ வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.