Site icon ITamilTv

ஊழியர்களின் மகப்பேறு விடுமுறையை குறைத்த எலான் மஸ்க்.. அதிருப்தியில் ஊழியர்கள்..!

Spread the love

ட்விட்டர் நிறுவனத்தில் மகப்பேறு கால விடுமுறையை (maternity leave) 140 நாட்களில் இருந்து வெறும் 14 நாட்களாக குறைத்து அதன் நிறுவனர் எலான் மஸ்க் அறிவித்துள்ளது ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல சமூக வலைத்தளமான ட்விட்டர் நிறுவனத்தை உலக பணக்காரர் ஆன எலான் மஸ்க் வாங்கிய பிறகு பல்வேறு அதிரடி மாற்றங்களை கொண்டு வந்துள்ளார்.

இதற்கிடையே, ஏராளமான ஊழியர்களையும் பணிநீக்கம் செய்துள்ளார். இந்த நிலையில், ட்விட்டர் நிறுவனத்தில் மேலும் ஒரு அதிரடி மாற்றத்தை எலான் மஸ்க் செய்துள்ளார். அதன்படி, குழந்தை பிறந்த பிறகு ஊழியர்களுக்கு வழங்கப்படும் பெற்றோர் விடுப்பு (maternity leave) முன்னதாக 20 வாரங்களாக இருந்த நிலையில் அதனை இரண்டு வாரங்களாக குறைத்து எலான் மஸ்க் உத்தரவிட்டுள்ளார்.

அதாவது, 140 நாட்களாக இருந்த மகப்பேறு விடுமுறையை வெறும் 14 நாட்களாக குறைத்துள்ளார் எலான் மஸ்க். இவரின் இந்த அறிவிப்புக்கு பலரும் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

மேலும், இது தொடர்பாக ட்விட்டர் பயனர் ஒருவர் கூறுகையில், “ட்விட்டரில் அவமான செய்தி. இரண்டு வாரங்கள் மட்டுமே சம்பளத்துடன் கூடிய பெற்றோர் விடுப்பு இது சரியான வழி இல்லை” என்று பதிவிட்டுள்ளார்.

இதேபோல் மற்றொரு பயனர், “திவால் நிலையை எதிர்கொள்ளும் ஒரு நிறுவனம் மட்டுமே இதை செய்யும்.. இது குழந்தைகளை பெறாமல் இருக்க உங்கள் ஊழியர்களை ஊக்குவிக்கும்” என்று பதிவிட்டுள்ளார்.


Spread the love
Exit mobile version