“கருப்பன் குசும்புக்காரன்”.. வாட்ஸ்அப், யூடியூப் ,பேஸ்புக் ஆகியவற்றை கிண்டல் செய்து புகைப்படம் வெளியிட்ட எலான் மஸ்க்!!

திரெட்ஸ், வாட்ஸ்அப், யூடியூப் ,பேஸ்புக், டிக்டாக் ஆகியவற்றை கிண்டல் செய்து X – ல் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார் எலான் மஸ்க்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு டிவிட்டர் தளத்திற்கு போட்டியாக, அதனை அப்படியே காஃபி பேஸ்ட் செய்து திரெட்ஸ் என்ற தளத்தை மார்க் ஜூக்கர்பெர்க் தலைமையிலான மெட்டா அறிமுகம் செய்தது.

இதனால், கடுமையான விமர்சனங்களை பெற்று ஒரு சில வாரங்களிலேயே இருந்த இடம் தெரியாமல் மாயமானது திரெட்ஸ் வலைத்தளம்.

இந்நிலையில், தற்போது ட்விட்டரிலிருந்து மாறி X என மாறிய வலைதள பக்கத்தில் அடுத்தடுத்து பல புதிய சேவைகளை கொண்டு வர எலான் மஸ்க் திட்டமிட்டு உள்ளார். இதில் முக்கியமாக பேஸ்புக், வாட்ஸ்அப் தளங்களில் இருக்கும் சேவைகளை ஒருங்கிணைத்து X தளத்தில் அளிக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

எக்ஸ் தளத்தின் சிஇஓ-வான லிண்டா யாக்கரினோ அடுத்து டிவிட்டரில் வரப்போகும் மாற்றங்கள், சேவைகள் குறித்து வீடியோ ஒன்றினை வெளியிட்டார்.

அந்த வீடியோவில் ஒருவரின் பாலோவர்களை பார்ப்பது முதல், வாட்ஸ்அப் அல்லது பேஸ்புக் மெசென்ஞர் போன்ற சாட்டிங் சேவை, டிவிட்டருக்குள்ளேயே வீடியோ கால் வசதி, வீடியோ பிரிவில் ஷாட் வீடியோ, நீண்ட நேரம் கொண்ட வீடியோ, வெர்டிக்கல் வீடியோ என அனைத்து சேவைகளும் வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

டிவிட்டரில் இருக்கும் வாடிக்கையாளர்கள் எதாவது ஒரு வகையில் அதன் தளத்தை பயன்படுத்த வேண்டும் என்ற இலக்குடன் எலான் மஸ்க் X தளத்தை மாற்றும் இலக்கை நோக்கி ஒடிக்கொண்டு இருக்கிறார் எனவும், விரைவில் எக்ஸ் தளத்தில் ஷாப்பிங் செய்யும் வசதிகளும் வர போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், தற்போது திரெட்ஸ், வாட்ஸ்அப், யூடியூப் ,பேஸ்புக், டிக்டாக் ஆகியவற்றை கிண்டல் செய்து X தளத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார் எலான் மஸ்க்.

Total
0
Shares
Related Posts