பிரபல பாலிவுட் நடிகை கங்கனாவின் நடிப்பில் உருவாகியுள்ள ‘Emergency ’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு தற்போது அறிவித்துள்ளது .
பாலிவுட் திரையுலகில் இருக்கும் பல முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை கங்கனா ரனாவத் .
தமிழ்,ஹிந்தி என பல மொழிகளில் நல்ல பல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் இவரது நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் தான் ‘Emergency’.
இந்தியாவின் முன்னாள் பிரதமராக இருந்து மறைந்த இந்திரா காந்தி ஆட்சியின்போது நிகழ்ந்த பல முக்கிய நிகழ்வுகளை மையமாக கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது .
மெலோடி கிங் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கும் இப்படத்தை நடிகை கங்கனாவே தயாரித்தது மட்டுமல்லாமல் இயக்கவும் செய்துள்ளார் .
மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இப்படத்தின் திரைக்கதை மற்றும் வசனத்தை ரித்தேஷ் ஷா எழுதியிருக்கிறார்.
முழுவீச்சில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்தப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது இறுதி கட்ட பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது .
இந்நிலையில் இப்படம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் சில பல காரணங்களால் படத்தின் வெளியீட்டு தேதி மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டது .
இதையடுத்து இப்படம் அடுத்த ஆண்டு ரிலீஸ் ஆகும் என்றும், புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் படக்குழு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது .
இந்நிலையில் இப்படம் ஜூன்.14ம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது .
நாட்டில் அவ்வப்போது நடக்கும் பல பிரச்சனைகளை தனது பிரச்சனையாக எடுத்துக்கொண்டு சர்ச்சை பேச்சால் பிரச்சனையில் சிக்கி கொள்வது நடிகை கங்கனாவுக்கு வழக்கமான ஒன்றாக மாறி விட்டது .
Also Read : https://itamiltv.com/tirupati-darshanam-april-month-booking-tomorrow/
இந்நிலையில் இவரது நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள ‘Emergency’ படமும் பல சர்ச்சைகளை கொண்ட படமாகவும் இப்படத்தை கங்கனா மிகவும் தைரியத்துடன் தயாரித்து நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
நாட்டின் கம்பீர பெண்ணாக வலம் வந்த இந்திரா காந்தி நாடு முழுவதும் அமல்படுத்திய அவசரநிலை பிரகடனத்தை மையப்படுத்தி இந்தத்திரைப்படம் உருவாக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.