ITamilTv

NZvENG : இறுதியில் மாறிய ஆட்டம் அதிர்ச்சி கொடுத்த இங்கிலாந்து!

Spread the love

20 ஓவர் உலகக்கோப்பை தொடரின் முக்கிய சுற்றான சூப்பர் 12 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இன்று நடந்த போட்டியில் குரூப் 1  யில் இடம்பெற்றுள்ள நியூஸீலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. நியூசிலாந்து அணி இதுவரை ஒரு தோல்வி கூட பெறவில்லை, ஆனால் இங்கிலாந்து அணிக்கு இந்த போடதீயில் வென்றால் மட்டுமே அரை இறுதி பற்றி சிந்திக்க முடியும்.

கபா மைதானத்தில் தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதல் இன்னினக்ஸில் பேட் செய்ய தீர்மானித்தது. இதனை தொடர்ந்து களமிறங்கிய தொடக்க வீரர்கள் ஹேல்ஸ் மற்றும் அணியின் கேப்டன் பட்லர் அதிரடி தொடக்கம் அமைத்தனர். இருவரின் பார்ட்னர்ஷிப் அணியின் ஸ்கோரை வேகமாக உயர்த்தியது.

newzealand

சிறப்பாக ஆடிய ஹேல்ஸ் 52 சேர்த்து வெளியேறினார், பின்னர் வந்த பேட்ஸ்மேன்களில் மொயின் அலி மட்டும் 20 ரன்கள் எடுத்து கொடுத்தார். மற்ற வீரர்கள் நியூசிலாந்து பந்து வீச்சிள் பெவிலியன் சென்றனர். தொடர்ந்து பேட் செய்த பட்லர் 47 பந்தில் 73 குவித்து அணிக்கு வலுவான ஸ்கோர் அமைத்தார்.

இறுதியில் இங்கிலாந்து 179 ரன்கள் குவித்தது. இதனை தொடர்ந்து இலக்கை நோக்கி நியூசிலாந்து களமிறங்கியது. முன் போட்டியில் சிறப்பாக ஆடிய தொடக்க வீரர்கள் ஆளென், கான்வே அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அணியின் கேப்டன் வில்லியம்சன், அதிரடி வீரர் பிலிப்ஸ் பார்ட்னர்ஷிப் அமைத்து சிக்கலை சரி செய்தனர். பிலிப்ஸ் இங்கிலாந்து பந்து வீச்சை அடித்து விரட்ட ஸ்கோர் வேகமாக ஏறியது.

ஒரு முனையில் 40 ரன்கள் எடுத்த வில்லியம்சன் ஸ்டோக்ஸ் வீசிய பந்தில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இங்கிலாந்து அணியின் வுட் அதிரடி பந்து வீச்சால் ரன் கட்டுப்பட்டது 4 ஓவருக்கு 54 ரன்கள் சேர்க்க வேண்டிய நிலையில் இரு அணிகளுக்கும் நெருக்கடி கூடியது. சாம் குரான் வீசிய பந்தில் பிலிப்ஸ் அவுட் ஆக ஆட்டம் இங்கிலாந்து வசம் சென்றது. இறுதியில் நியூசிலாந்து 159 ரன்கள் சேர்த்து 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இந்த வெற்றியால் இங்கிலாந்து அணி  5 புள்ளிகள் பெற்று புள்ளி பட்டியலில் 3 ஆம் இடம் சென்றது. மேலும் அரை இறுதி போட்டிக்கு தகுதி பெற இங்கிலாந்து அணிக்கு  வாய்ப்பு கூடியுள்ளது.  வரும் போட்டியில் வெல்வதான் மூலம் அரை இறுதி வாய்ப்பு உறுதிபெறும்.


Spread the love
Exit mobile version