டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவதில் இருந்து ஓய்வுப் பெறுவதாக இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் மொயின் அலி அறிவித்துள்ளார்.
எனக்கு இப்போது 34 வயதாகிறது. என்னால் முடிக்கின்ற வரையில் கிரிக்கெட் விளையாட விரும்புகிறேன் என்றும் மற்ற பார்மெட் கிரிக்கெட்டை காட்டிலும் டெஸ்ட் கிரிக்கெட் ஆகச்சிறந்தது என்றும் கூறியுள்ளார்.

மேலும் அன்றைய நாள் ஆட்டம் சிறப்பானதாக அமைய வேண்டும் என்றும் நான் டெஸ்ட் கிரிக்கெட்டை அனுபவித்தே விளையாடி உள்ளேன் என்றும் கூறியுள்ள சுழற்பந்து வீச்சாளரான மொயின் அலி அந்த பார்மெட்டில் நான் சிறப்பான பங்களிப்பை அணிக்காக கொடுத்துள்ளேன் என்றும் தெரிவித்துள்ளார்.
கடந்த 2014-இல் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரராக களம் கண்ட மொயின் அலி, 64 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 2,914 ரன்களும், 195 விக்கெட்டுகளும், 40 கேட்ச்களும் பிடித்துள்ளார்.
தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஐபிஎல் 2021 சீசனில் விளையாடி வரும் மொயின் அலி டி20 உலகக் கோப்பைக்கான இங்கிலாந்து அணியிலும் அவர் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.