இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான ஜேம்ஸ் ஆண்டர்சன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ( James Anderson ) இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
கடந்த 2003-ம் ஆண்டு லார்ட்ஸில் நடைபெற்ற ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஜேம்ஸ் ஆண்டர்சன் அறிமுகமானார். இதுவரை 187 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள ஜேம்ஸ் ஆண்டர்சன் 700 விக்கெட்களை வீழ்த்தி அசத்தியுள்ளார் .
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 700 விக்கெட்களை கைப்பற்றியுள்ள முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்த ஆண்டர்சன் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 194 ஆட்டங்களில் விளையாடி 269 விக்கெட்கள் கைப்பற்றியுள்ளார்.
Also Read : குறிப்பிட்ட சில நிமிடங்கள் விண்வெளி மையத்தை வெறும் கண்ணால் பார்க்கலாம் – நாசா
இந்நிலையில் 42 வயதான ஜேம்ஸ் ஆண்டர்சன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் .
ஜூலையில் மே.இ.தீவுகளுக்கு எதிரான இங்கிலாந்தின் முதல் டெஸ்ட் போட்டிக்குப் பிறகு ஆண்டர்சன் ஓய்வு பெற உள்ளார் .
20 வருடங்கள் இங்கிலாந்து அணியில் விளையாடி பல சாதனைகளை படைத்துள்ள ( James Anderson ) ஜேம்ஸ் ஆண்டர்சன் ஓய்வு பெறுவதாக அறிவித்ததை அடுத்து அவரின் அடுத்த கட்ட நகர்வுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.