விடுதலை படத்தில் தனது நடிப்பை பார்த்து விட்டு தியேட்டரிலேயே மனைவி தேவர்தர்ஷினி அடித்ததாக தெரிவித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள விடுதலை திரைப்படம் மார்ச் 31 அன்று திரையரங்கில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. நடிகர் சூரி கதாநாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தில், அவருடன் விஜய் சேதுபது, பவானிஸ்ரீ, கௌதம் வாசுதேவ் மேனன், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
எழுத்தாளர் ஜெயமோகனின் 18 பக்கங்களைக் கொண்ட ‘துணைவன்’ சிறுகதையில், கதையின் மையப் புள்ளியை மட்டும் எடுத்துக் கொண்டு, அதில் தனது கற்பனைக் கலந்த கதையைக் கொண்டு வெற்றிமாறன் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். 2 பாகங்களாக உருவான இந்த படத்தின் முதல் பாகம் வெளியாகியத்தை தொடர்ந்து திரை அரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் அலை மோதியது.

இந்த படத்தில் சூரி, விஜய் சேதுபதிக்கு அடுத்தப்படியாக ஓசி (Officer In charge) என்னும் கேரக்டரில் நடித்த நடிகர் சேத்தனை பலரும் பாராட்டுகளையும் , பல்வேறு தரப்பினர் விமர்சித்தும் வருகின்றனர். இந்த நிலையில் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசிய சேத்தன், விடுதலை படத்தில் நடிக்க முதலில் 22 நாட்கள் கூப்பிட்டார்கள். கடைசியில் என்னுடைய காட்சிகள் முடிய 122 நாட்கள் ஆனது.
இதனை தொடர்ந்து படத்தில் பெண்களை நிர்வாணப்படுத்தும் காட்சி எடுக்கும் போது மொத்த செட்டும் அமைதியாகவே இருந்தது. அந்த அளவுக்கு அந்த காட்சியின் வெளிப்பாடு இருந்தது. பெண்களை மையப்படுத்தி எடுக்கும் காட்சியில் யார் தேவையோ, அவர்களை மட்டுமே அந்த அறையில் இருக்க வெற்றி அனுமதித்தார்.
படம் பார்த்துவிட்டு நிறைய பேர் போன் செய்து பாராட்டினார்கள். தியேட்டரில் என்னுடைய மனைவி தேவதர்ஷினியும், மகளும் படத்தில் என் கேரக்டரை பார்த்து விட்டு என்னை அடித்தார்கள் என வேடிக்கையாக தெரிவித்து இருந்தார்.