கோவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்( Nirmala Sitharaman) பங்கேற்ற கடன் வழங்கும் நிகழ்ச்சியில், தொழில்முனைவோர் சதீஷ் வாக்குவாதம் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மத்திய பா.ஜ., அரசு, இந்திய சுதந்திர அமுத கால திட்டங்களில் ஒன்றாக, தொழில்வளர்ச்சியை ஊக்குவிக்க, பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள், பிராந்திய கிராமப்புற வங்கிகள், சிறு நிதி வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் வாயிலாக, மெகா கடனுதவி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில்,கோவையில் கொடிசியா கண்காட்சி வளாகத்தில்,மாபெரும் கடன் வழங்கும் முகாமில், ரூ.3,749 கோடி மதிப்பிலான கடனுதவிகளை, பிரதமரின் கடன் திட்டங்களின் கீழ், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வழங்கினார்.அந்த நிகழ்ச்சியில் சிறு, குறு தொழில்முனைவோர் பலர் கலந்துகொண்டனர்.
அப்போது சிறு, குறு தொழில்முனைவோருக்கு உத்தரவாதம் இன்றி கடன் வழங்கப்படும் என்று ஒன்றிய அரசு அறிவித்தபோதும் தனக்குக் கடன் மறுக்கப்படுவதாகவும், ₹40 லட்சம் கடனுக்கான உத்தரவாதத்தை வழங்கத் தயார் என்று கூறிய பிறகும் கடன் கிடைக்கவில்லை என தொழில்முனைவோர் சதீஷ் என்பவர் குற்றச்சாட்டினார்.
இதனால் அதிர்ச்சியடடைந்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொழில்முனைவோர் சதீஷின் முறையீடு பற்றி சம்பந்தப்பட்ட வங்கியிடம் விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்ற கடன் வழங்கும் நிகழ்ச்சியில், தொழில்முனைவோர் சதீஷ் வாக்குவாதம் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.