டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உடனான சந்திப்பு குறித்து அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி விளக்கம் கொடுத்துள்ளார்.
இதுகுறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் கொடுத்த எடப்பாடி பழனிசாமி கூறியதாவது :
இருமொழிக் கொள்கையை தொடர வேண்டுமென அமித்ஷாவிடம் வலியுறுத்தினேன். கல்வி நிதியை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தினேன். தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் தமிழக தொகுதிகளின் எண்ணிக்கையை குறைக்க கூடாது என வலியுறுத்தப்பட்டது.
Also Read : அண்ணனைக் கொல்ல முயன்ற பாசமலர் தங்கைக்கு 15 ஆண்டுகள் சிறை வாசம்..!!
முல்லைப் பெரியாறு அணையை பலப்படுத்தும் நடவடிக்கையை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினேன். உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி நதியிலிருந்து உரிய நீர் கிடைப்பதை உறுதி செய்ய வலியுறுத்தினேன்.
இந்த சந்திப்பானது மக்களுக்கான சந்திப்பே தவிர கூட்டணி குறித்து அமித் ஷாவிடம் எதுவும் பேசவில்லை. இப்போது கூட்டணி குறித்து பேச வேண்டிய அவசியமும் இல்லை என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.