காவேரி ஆற்றில் தண்ணீர் வரும்போது தமிழகத்தை சேர்ந்த விவசாயிகள் வரவேற்று வழிபடும் வீடியோ காட்சியை நார்வே நாட்டைச் சேர்ந்த பிரபல இயற்கை ஆர்வலர் ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தமிழகத்தில் விவசாயிகள், தனது விவசாய தொழிலை மிகவும் கண்ணியப்படுத்தும் வழக்கம் கொண்டவர்கள்.. அந்த வகையில், காவேரி ஆற்றில் நீண்ட மாதங்களுக்கு பிறகு பெருக்கெடுத்து வரும் நீரை வரவேற்கும் விதமாக, அந்த ஆற்றங்கரையின் மேல் விழுந்து கும்பிட்டு வழிபடும் வீடியோ ஒன்று கடந்த சில மாதங்களுக்கு முன் சமூக வலைதளங்களில் பரவியது.
அந்த வீடியோவை நார்வையை சேர்ந்த பிரபல இயற்கை ஆர்வலரும், ஐநா சபையின் சுற்றுச்சூழல் தலைவருமான, எரிக் சால்ஹீம்(Erik Solhiem) தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து நெகிழ்ச்சியடைந்துள்ளார்.
”இயற்கையை நம் தாயாக கருதும் போது அது அழகாக இருக்கிறது. தமிழ்நாட்டில் காவேரி ஆற்றை விவசாயிகள் வரவேற்று வழிபடுகின்றனர்” என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவை பல்லாயிரக்கணக்கானோர் லைக் செய்துள்ளனர்.
Its beautiful when we consider nature 🌎 as our mother..
Farmers welcoming and worshipping Kaveri River in Tamilnadu, India 🇮🇳
— Erik Solheim (@ErikSolheim) October 6, 2021