கடந்த மார்ச் 24ஆம் தேதி தற்கொலைக்கு முயன்றதாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட (ganeshamurthi) ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் .
2019 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுக சார்பில் ஈரோட்டில், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் கணேச மூர்த்தி. அவருக்கு இந்த தேர்தலில் எம்.பி. சீட் கொடுக்கப்படவில்லை.
காரணம் தொகுதியை திமுக தன் வசம் வைத்துக் கொண்டது தான். திமுகவில் இருந்து பிரிந்து வந்து வைகோ மதிமுகவை தொடங்கிய காலம் முதல் அவருடனே பயணித்து வந்தவர்தான் கணேசமூர்த்தி. சமீப காலமாக, அதுவும் வைகோவின் மகன் துரை வையாபுரி கட்சிக்குள் தலையெடுத்த பிறகு, கணேசமூர்த்தியிடம் கட்சி விவகாரம் குறித்து கலந்தாலோசிப்பதில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் தேர்தலில் மதிமுகவுக்கு திருச்சி தொகுதி ஒதுக்கப்படுவது மற்றும் துரை வையாபுரி போட்டியிடுவது குறித்தும் கணேசமூர்த்திக்கு தெரிவிக்கப்படவில்லை என்றும் சொல்லப்படுகிறது. இதனால் சீனியரான கணேசமூர்த்தி, கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்ததாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Also Read : https://itamiltv.com/bjp-kidding-for-parikhara-pooja-performed-by-nehru/
இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை கணேசமூர்த்தி திடீரென தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதற்கட்ட சிகிச்சைக்குப் பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர், சிகிச்சை பலனின்றி இன்று (28-03-2024)காலை உயிரிழந்துள்ளார் .
கணேசமூர்த்தியின் உயிரிழப்பு மதிமுகவினர் மத்தியில் பெரும் (ganeshamurthi) சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.