புத்தாண்டு கொண்டாட்டத்தில் மக்கள் மீது திடீர் தாக்குதல் நடத்திய அமெரிக்க முன்னாள் ராணுவ வீரரை போலீசார் கைது செய்துள்ளனர்.
உலகம் முழுவதும் உள்ள மக்கள் புதிய வருட பிறப்பை நேற்று ஆட்டம் பாட்டத்துடன் கோலாகலமாக வரவேற்று நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் அன்பை வெளிப்படுத்தி குதூகலமாய் இருந்தனர் . என்னதான் ஆட்டம் பாட்டம் என இன்ப வெள்ளத்தில் இருந்தாலும் ஒரு சில பகுதிகளில் புத்தாண்டு அவ்வ்ளவு சிறப்பாக அமையவில்லை என்பது மறுக்க முடியாதாக உண்மையாக மாறியுள்ளது.
அமெரிக்காவில் உள்ள நியூ ஆர்லியன்ஸ் மாகாணத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது, மக்கள் கூட்டத்துக்குள் டிரக் மோதியதில் 15 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
Also Read : ‘பாலிவுட்டால் ஏமாந்துவிட்டேன் – இயக்குநர் அனுராக் காஷ்யப் வேதனை..!!
இதையடுத்து டிரக் ஓட்டுனரை கைது செய்த அந்நாட்டு போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
ட்ரக் ஓட்டுநருக்கு ISIS பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பது முதற்கட்ட விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தாக்குதலில் ஈடுபட்டது முன்னாள் ராணுவ வீரரான சம்சத் தின் ஜபார் என்பதும் தெரியவந்துள்ளது . இவர் ஆப்கானிஸ்தானில் ராணுவப் பணியில் இருந்தவர் என்பதும் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.