மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரின் நெருங்கிய நண்பரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான வினோத் காம்ப்ளி கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருவதாக அவரது மனைவி வேதனை தெரிவித்திருப்பது பலரது கண்களையும் குளமாக்கி உள்ளது.
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி. GOD OF CRICKET என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கரின் நெருங்கிய நண்பரான வினோத் காம்ப்ளிக்கு தற்போது 51 வயதாகிறது .
இவர் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக அவதி பட்டு வரும் நிலையில் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மருத்துவ செலவு இதர செலவுகள் என கடுமையான நிதி நெருக்கடியை சந்தித்து வரும் வினோத் காம்ப்ளி மாத ஓய்வூதியமாக BCCI-யிடம் இருந்து ₹30,000 பெற்று வருகிறார்.
இருப்பினும் வீடு பழுதுபார்ப்புக்கு ரூபாய் 15,000 கட்டணம் செலுத்த முடியாமல், அதற்கு பதில் தனது ஐபோனை கொடுத்ததாக அவரது மனைவி கூறியுள்ளார் மேலும் இதே நிலை தொடர்ந்தால் அவர் தனது வீட்டையே இழக்க நேரிடும் என காம்ப்ளியின் மனைவி வேதனை தெரிவித்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.