அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது குறித்து கட்சித் தலைமை நிர்வாகிகள் ஆலோசித்து முடிவெடுப்பார்கள். அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம்.
ஏற்றுக்கொள்வது என்பது மக்களின் விருப்பம். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற அடிப்படையிலேயே அதிமுக செயல்பட்டு வருகிறது என்று கூறினார்.
இந்த நிலையில், ஓபிஎஸ் கருத்து பற்றி அதிமுக செய்தித் தொடர்பாளரும் முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார்.
அவர் கூறுகையில்; “சசிகலாவை எதிர்த்துதான் ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்தினார். சசிகலாவுடன் அதிமுகவினர் எந்தவித தொடர்பும் வைக்கக்கூடாது என கூறியவர் ஓபிஎஸ்’ என்றார்.
சசிகலாவை நீக்கியது பொதுக்குழுவை கூட்டி எடுக்கப்பட்ட முடிவு. சசிகலாவுக்கு ஆதரவாக செயல்பட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றும் ஜெயக்குமார் கூறினார்.