ஆனை முகத்தனை..
கஜ ராஜனை..
தந்த தந்தையே போற்றி..
ஞானக்கதிர்வேல் முருகனை..
மால் மருகனை பெற்ற அப்பனே போற்றி..
ஈசனே போற்றி..
அருணாச்சலனே போற்றி..
திருவண்ணாமலை வீற்றிருக்கும் திருவே போற்றி..
ஓங்கார நாதனே.. போற்றி போற்றி..
திருவண்ணாமலை வாழ் பரமேசா..
அருணாச்சலனே.. ஜெகதீஷா..
நீர் நிலம் நெருப்பு வானம்
காற்றென விரிந்தனை..
அறுசுவைகளில் புதைந்து
உயிர் வளர்த்து காத்தனை..
சப்தமாய் ஸ்பரிசமாய்
நறுமணத்தின் நாதனாய்..
உருவமாய் முன்னிருந்து
எமை இயக்கும் தேவனே..
ஓம் நமச்சிவாய
ஓம் நமச்சிவாய
ஓம் நமச்சிவாய
ஓம் நமச்சிவாய
தோம் தித்தோம் தித்தோம் என
தாள வாத்தியம் முழங்க
சலங்கை கட்டும் கால்களில்
ததீம் ததீம் ததீம் என…
தப்பாத தாளத்தோடு பொற்பதம்
பதித்து ஆடுவாய்…
மேலான மௌன சப்தமாய்
ஓங்காரம் கண்ட ஈசனே..
ஓம் நமச்சிவாய
ஓம் நமச்சிவாய
ஓம் நமச்சிவாய
ஓம் நமச்சிவாய
நீர் அணிந்த மேனியோடு
நீள் சடை பிரண்டு ஆட
தோல் கிழித்து ஆடை கொண்டு
ஆடும் அலங்காரனே…
உடுக்கொலி தெரித்ததில்
சமஸ்கிருதம் சமைத்தனை
அருந்தமிழ் கொடுத்தெமை
வாழ வைக்கும் தெய்வமே…
ஓம் நமச்சிவாய
ஓம் நமச்சிவாய
ஓம் நமச்சிவாய
ஓம் நமச்சிவாய
மலைமகள் உமையவள்
மேனி உன்னில் பாதியாய்..
மலைமகள் உமையவள்
மேனி உன்னில் பாதியாய்..
சடை சிரம் நனைத்திறங்கும்
அலைமகள் கங்கையாம்…
இடை விடாது நவகிரகங்கள்
உருண்டுருண்டு சுற்றவே..
நடம்புரி நடம்புரி
நில்லாமல் நடராஜனே..
ஓம் நமச்சிவாய
ஓம் நமச்சிவாய
ஓம் நமச்சிவாய
ஓம் நமச்சிவாய
அகம் கவர்ந்த சிந்தையில்
புறம் அடங்க கண்டவன்
புறம் விளைந்தவற்றை
நெஞ்சகத்தில் கொண்டு விட்டவன்..
அகம் புறம் இரண்டற
இணைந்த இன்ப ஜோதியில்..
சுகம் வளர்க்கும் சித்தம் கொண்டு
நடமிடும் ஈசனே..
ஓம் நமச்சிவாய
ஓம் நமச்சிவாய
ஓம் நமச்சிவாய
ஓம் நமச்சிவாய
சுயம்பு லிங்கமாக வந்த
ஆதி இல்லா ஜோதியே
இயங்குகின்ற கோள்களுக்கு
அண்டமில்லா சொந்தமே…
பகலுறங்கி இரவிழிக்கும்
சாயும் சந்தி இன்பமே..
இகம் பரம் இரண்டுமான
பழைய பரமேசனே..
ஓம் நமச்சிவாய
ஓம் நமச்சிவாய
ஓம் நமச்சிவாய
ஓம் நமச்சிவாய
சத்தியம் உரைக்கும் நெஞ்சில்
சித்தம் சிறை கொண்டவன்
உத்தமர்கள் ஊழ்வினைகள்
மாற்றவல்ல அற்புதன்…
சர்ப்பம் சூழ்ந்த மேனியோடு
சந்திரப்பிறை அணிந்த
மாய மஹா தேவனே
ஆதி பெரும் யோகியே..
ஓம் நமச்சிவாய
ஓம் நமச்சிவாய
ஓம் நமச்சிவாய
ஓம் நமச்சிவாய