நடிகர் ஃபஹத் பாசில் மாமன்னன் திரைப்பட கதாபாத்திரமான ரத்தினவேலு கவர் புகைப்படத்தை பேஸ்புக்கில் இருந்து நீக்கியுள்ளது பேசுபொருளாக மாறி உள்ளது.
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு, உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ்,ஃபஹத் பாசில் உள்ளிட்ட முக்கிய படங்கள் நடித்துள்ள படம் மாமனான். இந்த படம் கடந்த ஜூன் மாதம் இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிய மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றதோடு மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது.

இதனையடுத்து இந்த திரைப்படம் ஓடிடியில் வெளியானது மிகப்பெரிய வெற்றி சாதனையை தந்தது. ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் ஒருவர் எம்எல்ஏ ஆன பிறகும் ஆதிக்க சாதியினரால் ஒடுக்கப்படுவதும், அதனை எதிர்த்து தந்தையும் ,மகனும் எப்படி கையாள்கிறார்கள் என்பது தான் இந்த படத்தின் கதையாக அமைந்தது.

இந்த படத்தில் ரத்தினவேலு என்ற கதாபாத்திரத்தில் ஃபஹத் பாசில் நடித்திருந்தார். ஆனால் ரத்தினவேல் என்ற கதாபாத்திரம் சாதிப் பெருமையை அடங்கி கவுரவத்தை பாதுகாக்கும் மற்றும் அடிமைத்தனத்தை விரும்பும் வில்லன் கதை பாத்திரம். இந்த காதாபாத்திரத்தில் ஃபஹத் பாசில் அருமையாக நடித்து இருந்தாக ரசிகர்கள் அவரை பாராட்டி வந்தனர்.

இந்த நிலையில் கடந்த சில தினங்களாக ரத்தினவேல் கதாபாத்திரம் சாதிய பெருமைகளை வெளிப்படுத்தும் விதமாக இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வந்தது. இதற்க்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

முன்னதாக தந்து facebook கவர் பேஜ் புகைப்படமாக ஃபஹத் பாசில் வைத்திருந்தார். இதற்கும் சாதி பெருமையின் புகழை பாடும் வகையில் கமெண்ட் செய்து வந்தனர். இந்த நிகழ்வு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தந்து facebook கவர் பேஜ் ஃபஹத் பாசில் தற்பொழுது நீக்கியுள்ளார்.