நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கு நீண்ட நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் அவர்களுக்கு விவாகரத்து வழங்கி குடும்ப நல நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழ் திரையுலகில் நட்சத்திர ஜோடியாக வலம் வந்த தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தங்களது 14 வருட இல்லற வாழ்க்கையில் இருந்து பிரிவதாக கடந்த 2022 ஆம் ஆண்டு கூட்டாக அறிவித்தனர்.
அனைவர்க்கும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த செய்தியை அடுத்து ரஜினிகாந்த் உள்பட பலர் இருவரிடமும் பேசி சமரசம் செய்து வைக்க முயன்ற நிலையில் இருவரும் பிரிவதில் உறுதியாக இருந்ததால் சட்டப்படி விவாகரத்து பெற இருவரும் நீதிமன்றத்தை நாடினர்.
இந்நிலையில் நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் குடும்ப நல நீதி மன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா இருவருக்கும் நீதிமன்றம் பல முறை வாய்பளித்தும் அவர்களின் முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்பதாலும் இருவரும் பிரிந்து வாழ்வதில் உறுதியாக இருப்பதாலும் அவர்களுக்கு விவாகரத்து வழங்கி சென்னை குடும்ப நல நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.